அரசாங்கம் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்துள்ளது?

அரசாங்கம் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய உரச் செயலகம் விளக்கமளித்துள்ளது.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த அலுவலகம், குறித்த கூற்றில் உள்ள சில விடயங்கள் உண்மையானவை அல்ல என வலியுறுத்தியுள்ளது.

கஜகஸ்தானில் இருந்து குறைந்த விலைக்கு உரத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தும், 800 அமெரிக்க டொலர் விலையில் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பிரதிநிதி சுட்டிக்காட்டியிருந்தார். அந்நாட்டிலிருந்து ஒரு மெட்ரிக் தொன் யூரியா உரத்தை 220 முதல் 320 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், 800 டொலர் போன்ற அதிக விலைக்கு உரத்தை இறக்குமதி செய்ய நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள தேசிய உரச் செயலகம், அந்நாட்டிலிருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தாம் தாமதமின்றி அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், இதுவரையில் அந்த நிறுவனங்கள் கஜகஸ்தானில் இருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை என அந்த செயலகம் சுட்டிக்காட்டுகிறது.

அதேபோல், ஏப்ரல் 29ஆம் திகதி ‘Ceylon Trading and Plantation (Pvt) Ltd’ எனும் நிறுவனம் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்திற்கான கட்டளையைப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும், அந்த நிறுவனமும் இதுவரை யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை என தேசிய உரம் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதத்தில் இந்தியாவும் ஒரு மெட்ரிக் தொன் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 900 அமெரிக்க டொலர் செலவிட்டுள்ளதாகவும் அந்த செயலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்

kan

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்