பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழந்துள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹாஇலுப்பள்ளம பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.எம். பியசேன திசாநாயக்க என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மஹகல்கடவல பகுதியில் வசிக்கும் தனது இளைய சகோதரரின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது இல்லத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மஹகல்கடவல வளைவு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.