அமெரிக்கா ஈரானுக்கு 2 ஆவது போர்க் கப்பலை அனுப்பும்!

ஈரானை அச்சுறுத்தும் வகையில் 2 ஆவது போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பி வைக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரானில் கொமேனி அரசுக்கு எதிராக மக்கள் உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்தும் சுதந்திரம் வேண்டியும் பொதுமக்கள் ஈரான் முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது அரசு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்தார்.

அதற்காக ஏற்கெனவே ஒரு போர்க் கப்பலை மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைத்தார். ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானும் எச்சரித்தது.

இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கெனவே உள்ள போர்க் கப்பலுக்கு உதவியாக ‘யு.எஸ்.எஸ். ஜெரால்டு ஆர் போர்டு’ என்ற 2 ஆவது போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பி வைக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்தப் பின்புலத்திலும் ஈரானில் உள்நாட்டு கலவரமும் சேர்ந்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதை தணிக்க ஓமன் மற்றும் கட்டாரில் ஈரான் – அமெரிக்கா உட்பட முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடத்தப்பட்டது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஏற்கெனவே இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்றுவரும் சண்டை மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் பரவும் என்று வளைகுடா நாடுகள் எச்சரித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா 2 ஆவது போர்க் கப்பலை மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பினால் நிலைமை மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான