தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக- சாகச நாயகனாக நடித்திருக்கும் ‘கரிகாலா’ திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் யுகேந்தர் முனி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ‘கரிகாலா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். பிரவீண் கே. பங்காரி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பகாலா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜேனரிளான இந்த திரைப்படத்தை ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி – ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகன் புராண காலகட்ட நாயகனின் தோற்றத்துடன் சிங்கத்தை விரட்டிச் சென்று வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதத்துடன் குதிரையில் செல்வது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படம் தமிழ்- தெலுங்கு – இந்தி – ஆகிய மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாகிறது என்றும், இதில் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் திகதி அன்று வெளியாகும் இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அன்று வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.