PickMe சாரதி போல் நடித்த ’யக்கல நாமலின்’ கூட்டாளிகள் இருவர் கைது

PickMe செயலியின் வாடகை முச்சக்கர வண்டிச் சாரதி போல் நடித்து, நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களை விநியோகித்து வந்த 38 வயதுடைய பிரதான சந்தேகநபரும், அவரது 27 வயது உதவியாளரும் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘யக்கல நாமல்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைப் பெற்று பல பகுதிகளுக்கு விநியோகித்து வருவதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. நாவலப்பிட்டி ஜயசுந்தர வீதியில் அமைந்துள்ள பிரதான சந்தேகநபரின் வீட்டைப் பொலிஸார் சோதனையிட்டபோது, அங்கிருந்த 2,450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், போதைப்பொருட்களைப் பல்வேறு இடங்களில் விநியோகிக்க உதவிய 27 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டிப் பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, பிரதான சந்தேகநபர் PickMe முச்சக்கர வண்டிச் சாரதி போல் நடித்து இக்கடத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொழும்புக்குச் சென்று போதைப்பொருட்களைப் பெற்று வந்து, அவற்றை விநியோகிப்பவர்களிடம் இவர் ஒப்படைத்து வந்துள்ளார். ஒவ்வொரு பயணத்திற்கும் PickMe வாடகைக் கட்டணத்திற்கு மேலதிகமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை இவர் பணமாகப் பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

jeyha

‘பிரெஸ்ட் ஸ்ட்ரோக்’; நீச்சலில் சாதித்த சிறுவன் ரகுநாதன் ஜெய்ஹரி

September 30, 2026

கொழும்பில் வசிக்கும் ரகுநாதன் – லக்ஷ்மி தம்பதியரின் 6 வயது மகன் ஜெய்ஹரி, நீச்சலில் புதிய உலக சாதனை படைத்து

ind

இஸ்ரேல்; விமானி மீது உதவி விமானி தாக்குதல்

September 30, 2026

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய் (flydubai – FZ1073) விமானத்தின் உதவி விமானி,

f

சட்டவிரோதமாக வெடிமருந்து பயன்படுத்தி மீன்பிடிப்பு!

September 30, 2026

மன்னார், சௌத்பார் உப்பு நீரேரி பகுதியில் வெடி மருந்துகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

jail

PickMe சாரதி போல் நடித்த ’யக்கல நாமலின்’ கூட்டாளிகள் இருவர் கைது

September 30, 2026

PickMe செயலியின் வாடகை முச்சக்கர வண்டிச் சாரதி போல் நடித்து, நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஹெரோயின்

dsdds

சட்டத்தை விட பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான பலமான உறவே போதைப் பேரழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்!

September 30, 2026

சட்டத்தை விடவும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான பலமான உறவு மூலமே போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும்

may

மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம்

September 30, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டம் நேற்று

Untitled

தானியங்கி ட்ரோன்களை நீருக்கடியில் இயக்கி சீனா கின்னஸ் சாதனை

September 30, 2026

நீச்சல் குளத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ரோபோக்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக எண்ணிக்கையிலான தன்னாட்சி தானியங்கி

Mid photos new.00_00_55_10.Still115

“அதிமுக இப்போது திமுகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டது!” – எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்!

September 30, 2026

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக் கழகமாகவே மாறிவிட்டதாகத் தமிழக முதலமைச்சர்

arrest

மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய ஆசிரியர் கைது

September 30, 2026

தலவாக்கலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஒருவர், வகுப்பறைக்குள் மாணவியொருவருக்குத் தகாத காணொளிகளைக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்

WhatsApp Image 2026-09-30 at 17.47.23

பீடத்தில் படிந்த நிழல்கள்: நல்லூரில் நிலவும் சீற்றம்

September 30, 2026

நல்லூர் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றது.. 1987 செப்டம்பரில் வரலாற்று சிறப்புமிக்க பன்னிரண்டு நாட்கள் இந்த மண் ஒரு தியாகியின் கடைசி

WhatsApp Image 2026-09-30 at 19.12.02

வைத்திய நிபுணர் சயந்தன் பேராசிரியராகப் பதவியுயர்வு!

September 30, 2026

சத்திரசிகிச்சைத் துறையில் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ள வைத்திய நிபுணர் பா.சயந்தன் அவர்களுக்கு வாழ்த்துகள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சத்திரசிகிச்சைத் துறையின் சிரேஷ்ட

images512-34141790676470

“தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக்கொ*லை வழக்கு!” – சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை அதிரடி ரத்து

September 30, 2026

மதுரை: நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை