Microsoft சேவைகளில் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு!

க்ரோசொப்ட் (Microsoft) நிறுவனத்தின் பல முக்கியமான இணையவழிச் சேவைகளில் ஏற்பட்டுள்ள பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, Microsoft Outlook, Microsoft Teams, Copilot உள்ளிட்ட சேவைகளை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை 12 ஆம் திகதி ஆரம்பமான இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்னஞ்சல்களை அனுப்புதல் மற்றும் பெறுதல், மின்னஞ்சல் பெட்டிகளைத் திறத்தல், அலுவலகத் தொடர்பாடல் மற்றும் இணையவழிச் சேவைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பயனர்களிடமிருந்து பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சேவைத் தடைகளைக் கண்காணிக்கும் Downdetector இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, Outlook சேவை தொடர்பில் ஒரே நேரத்தில் சுமார் 130,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, Exchange Online மின்னஞ்சல் சேவையை அணுகுவதில் பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் சில உட்கட்டமைப்புப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான சுமை ஏற்பட்டமையே இணைப்புச் சிக்கல்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில சேவையகங்கள் எதிர்பாராத விதமாகச் செயலிழந்துள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சேவையகங்களை மீண்டும் இயங்கச் செய்வதற்கும், இணையப் போக்குவரத்தை வேறு கட்டமைப்புகளுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

சில சேவைகள் படிப்படியாக மீளச் செயற்படத் தொடங்கியுள்ள போதிலும், அனைத்துச் சேவைகளும் வழமைக்குத் திரும்புவதற்கான உறுதியான காலவரையறை அறிவிக்கப்படவில்லை.

teaf

ஆசிரியர் மீது மாணவன் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பார்ட்டம்

November 14, 2026

திருகோணமலை, அபயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தின்போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில்

tho

’தேஹிபாலே மல்லி’ ஜோர்ஜியாவில் கைது

November 14, 2026

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் தென்பகுதியின் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான படபெந்தி மத்துமகே

th

திருவள்ளுவர் சிலை தென் கொரியாவில் திறப்பு

November 14, 2026

​கொரியத் தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்

For em

ஏமாற்றப்பட்ட 40 இலங்கையர்களுக்கு உதவி?

November 14, 2026

சவூதி அரேபியாவில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 40 இலங்கைப் பணியாளர்களுக்கு, அவர்களுக்குரிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக சுமார் 569

lau

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

November 14, 2026

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய,

image_8ee04cb420

நாமலின் கிரிஷ் விசாரணை; இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கோரல்

November 14, 2026

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி

8

“திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2,200 கோடி ஊழல்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

November 13, 2026

சென்னை: திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் பேட்ச் ஒர்க் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு

7

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை!” – திருமாவளவன்!

November 13, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பெண் அரசு ஊழியருக்கு எதிராக நடந்ததை ஒருபோதும் சரியெனக் கூற முடியாது என்றும், தவறு செய்தவர்கள்

905937788_1667128798145700_8446352789873238791_n

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளுக்கான செயலமர்வு!

November 13, 2026

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், அதன் பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாவட்ட மட்ட சிவில் சமூக அமைப்புகளின் புரிதலை

pratheepan

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வலிகளைப் புரிந்துகொண்டு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும் – அரசாங்க அதிபர்

November 13, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கையாளும்போது, அரச உத்தியோகத்தர்கள் வழமையான நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆவணங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளையும்

905937788_1667128798145700_8446352789873238791_n

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை வலுப்படுத்த அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – கலாநிதி ஜெஹான் பெரேரா

November 13, 2026

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும்

Namal-Rajapaksa-2

நாமல் ராஜபக்சவின் பிணை வழக்கில் இடைக்காலத் தடையுத்தரவு குறித்த தீர்ப்பு நவம்பர் 18ஆம் திகதி வழங்கப்படும்

November 13, 2026

சர்ச்சைக்குரிய ‘கிறிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்