மாவீர்களின் துயிலும் இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 3 கடிதங்கள் அனுப்பியும் இன்னமும் பதில் கிடைக்கவில்லை

ஜனாதிபதிக்கு இதுவரையில் முக்கிய விடயங்களை குறிப்பிட்டு 3 கடிதங்கள் அனுப்பியும் எந்தவொரு கடிதத்திற்கும் இதுவரையில் ஜனாதிபதியிடம் பதில் கிடைக்கவில்லை, தமிழ் மக்களுக்காக போராடிய மாவீர்களின் துயிலும் இல்லங்களில் அவர்களின் சமாதிகளுக்கு மேல் சப்பாத்துகால்களுடன் இராணுவம் விளையாடுவதும், அதில் நடந்து திரிந்து அந்த இடங்களை உதாசீனப்படுத்தவதும் இந்த நாட்டில் உங்களுக்கும் எங்களுக்குமான நல்லிணக்க இடைவெளியை அதிகரிக்குமே தவிர அது ஒற்றுமையை ஏற்படுத்தாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026 […]

200 ரூபா கொடுப்பனவு சட்டவிரோதமானது; “சவப்பெட்டி” ஏந்தி உருவ பொம்மையை எரித்து தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்து வருவதை கண்டித்து சனிக்கிழமை பொகவந்தலாவ, மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தினை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்க தீர்மானம் செய்துள்ளது எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 200 ரூபா கொடுப்பனவு சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு இந்த கொடுப்பனவை வழங்கலை […]

திருக்கோவிலில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர் கைது

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதை அடுத்து, கல்முனையின் மாரண்டமடு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர், திருக்கோவில் பகுதியில் பல வாடகை வீடுகளில் தனது மனைவியுடன் வசித்து வந்ததாக பொலிஸ்தரப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் முன்னர் வசித்து வந்த பல இடங்களுக்கு அதிகாரிகள் சென்றனர். […]

ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகயீனம்; வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் திடீர் சோதனை

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் ஆசிரிய மாணவர்கள் சிலர் வவுனியா வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து அம்மாணவர்கள் பலர் ஒரே வகையில் திடீர் சுகயீனம் அடைந்தமைக்கான காரணங்களை அறியும் பொருட்டு தேசிய கல்வியற் கல்லுாரியில் சோதனை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட ஆசிரிய மாணவர்களுடனும் கலந்துரையாடப்பட்டிருந்த போது, வவுனியா […]

தடகளத்தில் பெருமை சேர்த்த யமீக்குக்கு பாராட்டு

தெற்காசிய தடகளப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இலங்கைக்கும், மத்திய மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த வீராங்கனை சபியா யமீக்கைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவானது மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில் கட்டுகஸ்தோட்டையில் உள்ள றோயல் யல் அவென்யூ ஹொட்டலில் நடைபெற்றது.

இலங்கையைத் தோற்கடித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்துள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதில் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். […]

திருகோணமலையில் பொலிஸாரின் கன்னத்தில் அறைந்த பிக்கு?

திருகோணமலை பிரதான கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று மாலை வைக்கப்பட்ட புத்தர் சிலையை பெரும் பதற்றத்துக்கு மத்தியில் அகற்றிய பொலிஸாரின் கன்னத்தில் பிக்கு ஒருவர் தாக்கியுள்ளார். இதற்கிடையில், நேற்றிரவு திருகோணமலையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதேவேளை, இந்த அசாதாரண நிலைமை தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவின் துரித நடவடிக்கையினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது. திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை […]

இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் […]

பிரித்தானியாவில் கற்கும் சர்வதேச மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மாணவர் விசாவில் இருந்து இன்னோவேட்டர் நிறுவனர் விசாவுக்கு (Innovator Founder visa) நாட்டிலிருந்து வெளியேறாமலேயே நேரடியாக மாற பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த யோசனை, இந்த மாதம் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தொழில்முனைவோர் இலக்குடன் இருந்த மாணவர்கள் இன்னோவேட்டர் நிறுவனர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் பிரித்தானியாவை விட்டு வெளியேறி வேண்டியது கட்டாயமாக இருந்தது. எனினும், புதிய விதிமுறைகள் இந்த செயன்முறையை மாற்றியமைத்துள்ளன. இதன்மூலம், பட்டதாரிகள் தங்கள் […]

மகளை துஷ்பிரயோகப்படுத்திய தந்தை கைது

அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக தவறான முறைக்குட்படுத்தி வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார். குடும்பத்தில் 3ஆவது பிள்ளையாக இருக்கும் 14 வயது மதிக்கத்தக்க இந்த மாணவியை அவரது தந்தை இவ்வாறு தவறான முறைக்குட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை பொலிஸாருக்கு பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் […]