வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம் அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கத்தினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (27) ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்றொழில் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், கடலுக்குள் சென்று தேடுதல் நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

இது தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும், கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில், கடந்த திங்கட்கிழமை (02) அன்று கச்சதீவுக்கு அருகாமையில், இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் குறித்த இரு மீனவர்களையும் கண்டதாக இந்திய மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கியதாகவும் இந்திய மீனவர்கள் ஊரணி மீனவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

“எமது மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளிப்பது குறித்த தகவல்கள் தெரிந்தும், இந்த அரசாங்கம் அவர்களை தேடி மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கும் தகவல் வழங்கினோம். ஆனால், ஆறு நாட்களாகியும் இதுவரை எந்த ஒரு தேடுதல் நடவடிக்கையோ அல்லது பதில்களோ எமக்கு கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் உடனடியாக இந்திய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு ஆபத்தில் இருக்கும் மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்