யாழ்ப்பாணம் வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் முன்னெடுக்கவுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 15ஆம் திகதி, அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள் நிறைவடைகின்றன. […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வருண ஜயசுந்தரவை கைது செய்யவோ தடுத்து வைக்கவோ எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்பட வில்லை என, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (12) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். அதற்கமைய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தான் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் […]

இலங்கையில் பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம்

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ‘சிறுவர் உழைப்பிற்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் விடுத்துள்ள விசேட செய்தியிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்முறை இத்தினமானது ‘சிறுவர் உழைப்பற்ற நாடு, பிள்ளைகளுக்கு சிறந்த நாளை’ என்ற கருப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த அறிக்கையில் மேலும் […]

உலகளாவிய ரீதியில் முடங்கியது பேஸ்புக்!

உலகளாவிய ரீதியில் பேஸ்புக் சமூக வலைத்தளம் முடக்கியுள்ளது. இதன் காரணமாக முடக்கத்தைச் சந்தித்துள்ளதாக பல இலட்சம் பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வலைத்தளங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் IsDown தளத்திற்கமைய, 5,700க்கும் மேற்பட்ட பயனர்கள் பேஸ்புக் இயங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர். இந்த பாதிப்பு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பயனர்களை பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தே மிக அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.

பாடசாலை வளாகத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட பெர்ரி நகரைச் சேர்ந்த நபர் கைது எனப் பொலிஸார் தகவல்

பெர்ரி (Barrie) நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு வெளியே ஆபாசமான முறையில் நடந்துகொண்ட (Indecent act) ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை 7:40 மணியளவில் க்ளௌக்லி டிரைவ் (Cloughley Drive) பகுதியில், பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் நிகழ்ந்துள்ளது. பிள்ளைகளை பாடசாலையில் விடும் நேரத்தில், நபர் ஒருவர் பாடசாலை வளாகத்திற்குள் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெர்ரி பொலிஸ் […]

நியூ கிளாஸ்கோ, நோவா ஸ்கோஷியாவில் அதிகாலையில் ஏற்பட்ட ‘சந்தேகத்திற்கிடமான’ தீ விபத்து குறித்து விசாரணை

நோவா ஸ்கோஷியாவின் (N.S.) நியூ கிளாஸ்கோ (New Glasgow) பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட “சந்தேகத்திற்கிடமான” தீ விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிகாலை 2:30 மணியளவில் ஹை ஸ்ட்ரீட்டில் (High Street) உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவ ஊர்தி (Ambulance) குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் 20 வயதுடைய இளைஞன் […]

ஒன்ராறியோ வணிக வளாகத்தில் பெரும் விபத்து; பலர் பாதிப்பு எனத் தகவல்

வெள்ளிக்கிழமை காலை நகரின் வடமேற்குப் பகுதியில் நிகழ்ந்த, ‘பலர் பாதிக்கப்பட்டுள்ள’ (Mass-casualty) வாகன விபத்து குறித்து லண்டன் நகரின் பொலிஸ் அதிபர் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை 7:45 மணியளவில் ‘ஷெர்வுட் ஃபாரஸ்ட்’ வணிக வளாகத்தில் (Sherwood Forest Mall) உள்ள ‘குட்லைஃப் பிட்னஸ்’ (GoodLife Fitness) உடற்பயிற்சி மையத்தின் பின் சுவரில் வாகனம் ஒன்று மோதியதில், ஆரம்பகட்ட தகவல்களின்படி பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வணிக நிலையத்தைத் […]

ஹால்டன் வாகனத் திருட்டு தொடர்பான முக்கிய விசாரணை: ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஒருவரைத் தேடி வலைவீச்சு

ஹால்டன் (Halton) மற்றும் வாட்டர்லூ (Waterloo) பிராந்தியங்களில் நடந்த குறைந்தது 14 வாகனத் திருட்டுகள் மற்றும் திருட்டு முயற்சிகளுடன் தொடர்புடைய வாகனத் திருட்டுக் கும்பல் பற்றிய விசாரணையைத் தொடர்ந்து, ஹால்டன் பொலிஸார் ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன், ஆறாவது சந்தேகநபருக்கு எதிராகப் பிடியாணை (Warrant) பிறப்பித்துள்ளனர். 2026 மார்ச் மாதத்தில் மில்டன் (Milton) பகுதியிலுள்ள ஒரு வீட்டின் வாகனப் பாதையிலிருந்து (Driveway) வாகனம் ஒன்று திருடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விசாரணை ஆரம்பமானது. பின்னர் பொலிஸார் சந்தேகநபர்களை […]

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐ.நா. சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதாபிமானத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு!

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் நிறைவு விழா, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே ஆகியோரின் தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே, “வலுவான அரசியல் தலைமைத்துவம் மற்றும் அனர்த்த நிலைமையினை விரைவாக முகாமைத்துவம் செய்தல் ஆகியவை காரணமாகவே, டித்வா சூறாவளியினால் […]

இன்றைய அகழ்வின் போது 12 என்புத் தொகுதி அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12.06.2026) இடம்பெற்றுள்ளது. இதன்போது, 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், 353 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் […]