“வரலாற்றில் முதல்முறையாக 3-வது இடத்திற்குப் போன திமுக; பதற்றத்தில் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் விளாசல்

நாகப்பட்டினம்: சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக திமுக கூட்டணி 59 தொகுதிகளில் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதன் விரக்தியிலும் பதற்றத்திலும்தான், அboard நிர்வாகிகள் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சாடியுள்ளார். நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: அரசியல் நாகரிகமற்ற பேச்சு: தவெக அரசை நோக்கி ஆ. ராசா, சேகர்பாபு உள்ளிட்ட திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் தொடர்ச்சியாகக் கடுஞ்சொற்களையும் வசைமொழிகளையும் பேசி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. அரசியல் […]

“மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது!” – திருமாவளவன்

சிவகாசி: பட்டினப்பாக்கம் மக்களின் ஒப்புதல் இல்லாமல், அங்கு தமிழ்நாடு அரசால் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிவகாசியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பகிர்ந்துகொண்ட முக்கியக் கருத்துகள்: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்: சென்னை பட்டினப்பாக்கத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது; பரந்தூர் விமான நிலையத் […]

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லிபரல் கட்சி பழமைவாதக் கட்சியை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் லிபரல் கட்சி பழமைவாதக் கட்சியை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது என புதிய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது- மார்க் கார்னி லிபரல் கட்சியின் தலைவரான பிறகு, அக்கட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய முன்னிலை இதுவாகும். இன்று தேர்தல் நடத்தப்பட்டால் பெரும்பாலான கனடியர்கள் லிபரல் கட்சிக்கே வாக்களிக்க விரும்புவதாக அபேகஸ் டேட்டா (Abacus Data) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின் படி, லிபரல் கட்சி 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. இது […]

தடைகளை நீக்கியருளும் விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று !

பிள்ளையார் பூஜை என்பது ஒருநாள் கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் நமக்கு வளமும் வளமையும் தரும் ஆன்மீக பாதையை நினைவூட்டும் திருநாள் ஆகும். பிள்ளையாரின் அருளுடன் துவங்கும் வாழ்க்கைப் பயணம் எப்போதும் நன்மையிலும் வெற்றியிலும் முடியும். இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழா. தடைகளை நீக்கி, ஞானம், செல்வம், வெற்றி ஆகியவற்றை அருளும் விநாயகப் பெருமானின் பிறந்த நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் […]

அராலியில் இளைஞர் மீது வாள்வெட்டு – நால்வர் கைது

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கின் விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத் திரும்பும்போதே குறித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவான நிலையில் அவர்களை […]

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீதான புதிய ஹூதி தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள் மீதான ஈரானியத் தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு சடுதியாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதற்கமைய ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் 3.03% உயர்ந்து பீப்பாய் ஒன்று 107.51 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. […]

விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி!

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில், பாலமுனையைப் பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை – 08, அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட 4 பிள்ளைகளின் தந்தையான அப்துல் சமது முபாரிஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“தமிழ் ஈழம் வேண்டும்” என்று கேட்க மாட்டேன்; எனக்கு சிங்கள மக்கள் தான் வேண்டும்! – பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

– அனுராதபுரத்தில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன். ஆற்றிய உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு. நமது இதயங்களில் வாழும் ஜனாதிபதி அவர்களே, இந்த நாட்டிற்கு ஒரே ஒரு ஜனாதிபதியை மட்டுமே பெயரிட முடியும் என்றால், அன்றும் இன்றும் என்றும் இந்த நாட்டின் ஒரே ஜனாதிபதி என்றால் நமது மஹிந்த ராஜபக்ஷ, அவர்களிடம் அனுமதி வேண்டுகிறேன். எனக்கு இந்த மேடையில் நிறைய விஷயங்கள் பேச வேண்டியுள்ளது. […]

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளிய மற்றும் பல்லியா வாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட படகுகள் மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் […]

இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் – ஐ.நா கவலை

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்நாட்டின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே குறிப்பிடுகையில், இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த அந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவித்தார். இது போன்ற வன்செயல்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு […]