நம்மில் பலரும் தற்போது பணம் எடுப்பதற்காக ATM இயந்திரங்களை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இயந்திரத்தில் கார்டை போட்டு ரகசிய எண்ணை அழுத்திப் பணத்தை எடுத்துவிட்டு வந்துவிடுவோம். ஆனால் அந்த இயந்திரத்தில் உள்ள பட்டன்கள் எந்தப் பொருளால் செய்யப்பட்டுள்ளது என்பதை நம்மில் 99 சதவீத மக்கள் கவனித்திருக்கவே மாட்டார்கள்.
அவை எப்போதுமே உலோகம் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன.
பொதுவாக ஒரு ATM இயந்திரத்தை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பட்டன்களை அழுத்துவார்கள். ஒருவேளை அவை பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்டிருந்தால் மிக எளிதாக உடைந்துவிடும்.
ஆனால் உலோகத்தால் செய்யப்படும் பட்டன்கள் மிகவும் வலிமையானவை. கடுமையான பயன்பாடு, அடிக்கடி சுத்தம் செய்யும் ரசாயனங்கள் மற்றும் முரட்டுத்தனமான கையாளுதல் போன்ற அனைத்தையும் தாங்கி மிக நீண்ட காலம் உழைக்கும் தன்மையை இவை இயல்பாகவே கொண்டுள்ளன.
இதில்தான் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு ரகசியம் ஒளிந்துள்ளது. நாம் பிளாஸ்டிக் பட்டன்களை அழுத்தும்போது நமது கைவிரல்களின் உடல் வெப்பம் அந்தப் பட்டன்களில் சிறிது நேரம் அப்படியே தங்கிவிடும். திருடர்கள் Thermal Imaging எனப்படும் அதிநவீன கேமராக்களைப் பயன்படுத்தி நாம் எந்தெந்த எண்களை அழுத்தினோம் என்பதை அந்த வெப்பத்தின் அளவை வைத்து மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் ஏடிஎம் கீபோர்டு பேனல் அந்த வெப்பத்தை உடனடியாக வெளியேற்றி எவ்வித தடயமும் இல்லாமல் செய்துவிடும்.
சில நேரங்களில் கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைத்துப் பணத்தைத் திருட முயற்சிப்பார்கள். அந்த மாதிரியான நேரங்களில் உலோகப் பட்டன்கள் இயந்திரத்தின் உள்ளே இருக்கும் முக்கியமான எலக்ட்ரானிக் பாகங்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும் கவசமாகச் செயல்படுகிறது.