ATM Button ஏன் எப்போதுமே இரும்பில் இருக்கு?

நம்மில் பலரும் தற்போது பணம் எடுப்பதற்காக ATM இயந்திரங்களை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இயந்திரத்தில் கார்டை போட்டு ரகசிய எண்ணை அழுத்திப் பணத்தை எடுத்துவிட்டு வந்துவிடுவோம். ஆனால் அந்த இயந்திரத்தில் உள்ள பட்டன்கள் எந்தப் பொருளால் செய்யப்பட்டுள்ளது என்பதை நம்மில் 99 சதவீத மக்கள் கவனித்திருக்கவே மாட்டார்கள். அவை எப்போதுமே உலோகம் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக ஒரு ATM இயந்திரத்தை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பட்டன்களை அழுத்துவார்கள். ஒருவேளை அவை பிளாஸ்டிக் […]

விண்வெளியில் ரஷியா – அமெரிக்கா; புதிய செய்தி!

KOSMOS 2612 என்ற ரஷிய சாடலைட் ICEYE – X36 என்ற அமெரிக்க வணிக விண்கலத்தின் அருகெ சென்று SYNTHETIC APERTURE RADAR – SAR எனப்படும் ராடாரை வைத்துப் பார்த்திருக்கிறது. இதை மார்கோ லாங்ப்ரோக் என்னும் சாடலைட்டுகள் ஓடுவதைக் கண்காணிக்கும் நிறுவனம் கண்டு பிடித்து அறிவித்திருக்கிறது. இதை அந்த நிறுவனம் கவலை அளிக்கும் எலி-பூனைச் சண்டை விளையாட்டு என்று வர்ணித்திருக்கிறது. இது உலகளாவிய விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இது வழக்கத்திற்கு மாறான ஒன்று; […]

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விற்பனை; 30 வருட சிறைத்தண்டனை

பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்தமை தொடர்பில் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிறுமியின் தாயாருடன் தாகாத தொடர்பினை பேணிவந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து பிரதிவாதிக்கு 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து பாணதுறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 24 ஆம் திகதி வழக்கு மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான சிறுமியின் […]

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ். வை. எம். கோமஸ், ஏ. எல். ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ். எஸ். எஸ். பி. டி. எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (30) கையளிக்கப்பட்டன. […]

வடக்கு ஆளுநர் வேதநாயகன் மீது ஊழல் குற்றச்சாட்டு; விசாரணை செய்யுமாறு ஜோசப் ஸ்டாலின் முறைப்பாடு

தற்போதைய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ் மாவட்ட அரச அதிபராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் முறைகேடுகள் உள்ள நிலையில் அவை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊழல் ஆணைக் குழுவில் வெள்ளிக்கிழமை (30) முறைப்பாட்டை வழங்கினார். தற்போது வடக்கு மாகாண ஆளுநராக செயற்பட்டுவரும் நாகலிங்கள் வேதநாயகன் அவர்கள் 2015 மார்ச் முதல் 2020 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக […]

மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள்; இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம்!

இலங்கையின் மீன்பிடித்துறை கள உத்தியோகத்தர்களுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மீன்பிடி, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் டாக்டர் பி.கே. கொலித கமல் ஜினதாச ஆகியோருக்கு இடையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மீன்பிடி, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து சிறப்பித்தார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை […]