கரூர்:
அதிமுகவுக்கு செந்தில் பாலாஜியும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் துரோகம் இழைத்துவிட்டதாகவும், வரவிருக்கின்ற கரூர் இடைத்தேர்தலில் மக்கள் இருவருக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
கரூர் செயல் வீரர்கள் கூட்டத்தில் விமர்சனம்:
கரூர் – கோயம்புத்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி முன்னிலையிலும் இன்று (நவ.29) நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அதிமுக மூலம் கரூரில் அடையாளம் பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜி கட்சிக்குத் துரோகம் இழைத்துவிட்டு வேறு கட்சிக்குச் சென்று அதிமுகவை அழிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சியில் இரட்டை இலக்கத்தில் இருந்த அரிசி விலை இன்று மூன்று இலக்கத்தில் விற்கப்படுவதாகவும், வெளி மாநில வெங்காயத்தை விற்பனை செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை அரசு வீணடித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தவெக அரசு வெறும் ரீல்ஸ் மற்றும் ரீல்விடும் அரசாக மட்டுமே செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.
விவசாயிகள் நலன் மற்றும் தொகுதி மறுவரையறை:
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 6 மாத காலத்தில் தவெக ஆட்சி எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்றும், அரிசி, பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். டெல்டா வறட்சி இழப்பீட்டில் தெளிவில்லை என்றும், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.75,000 மட்டும் தள்ளுபடி எனத் தான்தோன்றித்தனமாக அறிவித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறை தொடர வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுள்ளதால் ஒட்டுமொத்தக் கட்சிகளும் ஆதரிப்பதாகவும், டிசம்பர் 31-க்குள் மறுவரையறை மேற்கொள்ளப்படாவிட்டால் தமிழ்நாடு கிட்டத்தட்ட 7 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
#EdappadiPalaniswami #AIADMK #Karur #SenthilBalaji #MRVijayabaskar #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive