சென்னை:
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளும் பல்லாண்டு கால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றித் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என்றும், வார இறுதி ஓய்வு முடிந்து திங்கள்கிழமை வந்தாலாவது பேசுவாரா என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சரின் நிர்வாகத் திறன் மீது விமர்சனம்:
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டு கால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!” என்று விமர்சித்துள்ளார்.
கூட்டணி மாறிய கட்சிகளுக்குக் கேள்வி:
தொடர்ந்து அந்தப் பதிவில் பிற அரசியல் கட்சிகளைக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், திமுகவைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில உரிமைகளைக் காக்கத் தொடர்ந்து போராடும் திமுக:
மேலும் தனது பதிவில் திமுகவின் நிலைப்பாடு குறித்துக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட திமுகவுக்கு இது குறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் திமுக என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!” என்று தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாடுகள் மற்றும் பிற கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#MKStalin #DMK #CMVijay #Thiruparankundram #JudicialOverreach #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive