யாழில் ‘மாத்தறை அம்புல’ உணவக இடிப்பு சர்ச்சை

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த “மாத்தறை அம்புல (Matara Ambula)” உணவகத்தின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து, பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

சிங்களக் குடும்பம் ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த இந்த உணவகம், யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலக்கம் 103 என்ற முகவரியில் உள்ள வாடகைக் கட்டிடத்தில் சுமார் ஐந்து ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. எனினும்,கட்டிடத்தின் ஒரு பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) சொந்தமான காணியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிர்மாணம் பிரதான வீதிக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனை அகற்றுமாறு ஆரம்பத்தில் அறிவுறுத்தப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, 2025 மே 2ஆம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபை, யாழ்ப்பாணம் மாநகர சபையில் முறைப்பாடு செய்துள்ளது. இந்த நிலையில், கட்டிட உரிமையாளருக்கு சட்டவிரோத நிர்மாணத்தை அகற்றுமாறு மாநகர ஆணையாளர் இரண்டு அறிவித்தல்களை அனுப்பியிருந்தார். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து, 2026 ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதியை அகற்றுமாறு கட்டிட உரிமையாளருக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவைப் பின்பற்றத் தவறினால், மாநகர சபையே குறித்த பகுதியை அகற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி, கடந்த நவம்பர் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகாரிகள் குறித்த கட்டிடத்தின் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதியை இடித்து அகற்றியுள்ளனர். இந்த நடவடிக்கை உணவகத்தை நடத்தும் குடும்பத்தின் இன அடையாளம் காரணமாக மேற்கொள்ளப்பட்டதல்ல. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற நிர்மாணம் தொடர்பான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

7

“கரூர் விவகாரத்தில் 5 நிமிடம் மாற்றி யோசித்திருந்தால் திமுக ஆட்சி பறிபோயிருக்காது – எ.வ.வேலு”

November 28, 2026

சென்னை கரூர் விவகாரத்தில் 5 நிமிடம் மாற்றி யோசித்திருந்தால் இன்று ஆட்சி நம்மிடம் இருந்திருக்கும் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

21

“திங்கள்கிழமை வந்தாலாவது முதலமைச்சர் விஜய் பேசுவாரா?” – மு.க.ஸ்டாலின் கேள்வி!

November 28, 2026

சென்னை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளும் பல்லாண்டு கால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றித் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்

6

“டெல்லி அணியா, தமிழ்நாடு அணியா?” – திமுக மீது தவெக ஐடி விங் கடும் விமர்சனம்!

November 28, 2026

சென்னை: நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாகவும், இதனால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் திமுக இன்று

IMG_2850

மாவீரர் தினத்தில் தமிழ் இளைஞர்கள் கைது..!

November 28, 2026

மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில், நினைவு நிகழ்வுகளின்போது முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியதற்காகச்

IMG_2848

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டுக்கு ஆபத்து..!

November 28, 2026

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம்

IMG_2847

கொழும்பு சென்ற பஸ் மீது கற்பாறை விழுந்ததில் பயணி பலி!

November 28, 2026

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பஸ் மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய

IMG_2846

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

November 28, 2026

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்காக விடுக்கப்பட்டமண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இன்று

ma

யாழில் ‘மாத்தறை அம்புல’ உணவக இடிப்பு சர்ச்சை

November 28, 2026

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த “மாத்தறை அம்புல (Matara Ambula)” உணவகத்தின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை

dru

சர்வதேச கடல் பகுதியில் போதைப்பொருள் படகு முற்றுகை

November 28, 2026

தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் நாடற்ற படகொன்றை

WhatsApp Image 2026-11-28 at 20.25.52

மாவீரர்நாள் வளைவு விவகாரம்: தவிசாளர் தியாகராசா பிரகாஷிடம் வாக்குமூலம்!

November 28, 2026

மாவீரர் நாள் வளைவு விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவு

5

“பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக நிபந்தனை ஆதரவு!” – மு.க.ஸ்டாலின் விளக்கம்!

November 28, 2026

சென்னை: மத்திய அரசின் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக முன்வைத்த 2 நிபந்தனைகளும் இடம்பெற்றுள்ளதால், அதற்கு நிபந்தனைகளுடன் ஆதரவு

4

“தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு பேரதிர்ச்சி தருகிறது!” – திருமாவளவன் எம்.பி. கருத்து!

November 28, 2026

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது திருப்பரங்குன்றம் தீர்ப்பை விடப் பேரதிர்ச்சி தருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள்