தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் நாடற்ற படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, குறித்த படகில் பயணித்த ஏழு வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட படகும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வெள்ளிக்கிழமை (27) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
எனினும், கைப்பற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளின் வகை மற்றும் அளவு தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.