மாவீரர் நாள் வளைவு விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் பிரதேச சபையில் வைத்து குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக யாழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் அங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பிரதேச சபையின் சட்டத்தரணி சிவலிங்கம் ரிசிகேசனும் பிரசன்னமாகியிருந்தார்.