இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வெளிநாடுகளிலும் மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை 27ஆம் நாளான இன்று, மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன.
அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாற்றில் இன்று மாலை மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.