பெண்ணொருவரைக் கொன்றுவிட்டுத் தப்பியோடியவர் யானை மோதி மருத்துவமனையில்…

அனுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையை செய்த நபர் விஷம் அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் காட்டு யானையுடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 45 வயதான கயனி இரோமா திசாநாயக்க என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மகள் பாடசாலைக்கு செல்வதற்காக உணவு தயாரிப்பதற்காக இன்று அதிகாலை குறித்த பெண் வீட்டின் சமையலறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், வீட்டின் பின்புறம் மறைந்திருந்த சந்தேகநபர் மன்னா, பெண்ணின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியமையால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் விஷம் அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் மஹஇலுப்பள்ளம நோக்கிப் பயணித்துள்ளார்.

இந்த நிலையில், மஹஇலுப்பள்ளம பலநோக்குக் கட்டிடத்திற்கு அருகில் அவரது மோட்டார் சைக்கிள் காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மஹஇலுப்பள்ளம, கலாகரம்பேவ பிரதேசத்தில் தங்க நகைகளை அடகு பிடிக்கும் வர்த்தகர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலுள்ள கால்வாயொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பணத் தகராறு அல்லது தகாத உறவு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

fr

Airbus ஊழல் வழக்கு: பிரான்ஸ் நிபுணர் சாட்சியமளிக்க இலங்கை வருகின்றார்

November 27, 2026

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற Airbus விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பான விசாரணைகளில் முக்கிய பங்காற்றிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தடயவியல்

mou

சபையில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி

November 27, 2026

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (27.11.2026) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி இலங்கையைத்

Untitled

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை குறித்த முக்கிய தகவல்

November 27, 2026

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதி பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் குறித்த 1,572 ஏக்கர்

Arrest_1

வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளைஞர் கைது!

November 27, 2026

வல்வெட்டித்துறையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வின்போது, அனுமதியின்றி

niha

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் – ஆளும் கட்சி

November 27, 2026

போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை

crim

பெண்ணொருவரைக் கொன்றுவிட்டுத் தப்பியோடியவர் யானை மோதி மருத்துவமனையில்…

November 27, 2026

அனுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த

ice dr

2026 இதுவரை: 3,700 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல்!

November 27, 2026

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 3,700 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

suresh sal

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சுரேஷ் சலேயின் மனு மீதான உத்தரவு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

November 27, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகத் தன்னைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்

ca

தனியார் வங்கி போன்ற போலி இணையத்தின் ஊடாக 10 இலட்சம் ரூபா மோசடி!

November 27, 2026

தனியார் வங்கியொன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஒத்த போலி இணையத்தளத்தை உருவாக்கி, நபரொருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை

ramc

சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் மீண்டும் தாக்குதல்

November 27, 2026

சவூதி அரேபியாவின் ஜசான் (Jazan) நகரில் அமைந்துள்ள ‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஆதரவு பெற்ற

rup

வங்கி கணக்கிலிருந்து மோசடி; அதிகாரி ஒருவர் கைது

November 27, 2026

தனியார் வங்கியொன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போன்ற ஒரு இணையதளத்தை உருவாக்கி, தனிநபரின் வங்கி கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் மோசடி

sana

அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தினால் ஜனநாயகம் மரணிக்கும் – சாணக்கியன்

November 27, 2026

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்ட அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் சட்டமானால்