சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரின் ஹொக்பெல்டன் (Hochfelden) பகுதியில் ‘மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வானது மணிக்கு நடைபெற்றது.
மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மண்டப வாயிலிலிருந்து மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டு, தமிழர் மரபிற்கமையப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாகத் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, மாவீரர் திருவுருவப் படத்திற்கு மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் சிறப்புற ஆரம்பமாகின.
போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுங்கு படுத்தப்பட்ட இந்நிகழ்வானது, தியாகத்தின் அடையாளமாகத் திகழும் மாவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உரித்துடையோரை மதிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாவீரர்கள் தொடர்பான நடனங்கள் இடம்பெற்றதுடன் போராளிகள், மூத்த தாயகப் பாடகர்கள் மற்றும் தாயகக் கவிஞர்கள் என அனைவரும் தாம் விதைத்துவிட்டு வந்த உரிமையுள்ள நண்பர்கள், தோழியர், சகோதர, சகோதரிகளுக்கான பாடல்கள், கவிதைகள் மற்றும் சிறப்புரைகளைச் சிறப்பாக வழங்கியிருந்தனர்.
அத்துடன் தங்களின் மாவீரர்களுடனான அனுபவப் பகிர்வுகளையும் மக்களுக்காக வழங்கியிருந்தனர்.