சென்னை:
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கூறி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.
அரசுத் தரப்பு முறையீடு:
இந்த வழக்கு தொடர்பான சமூக வலைதளப் பதிவுகளை நீக்கவும், செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதித்தும் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், உள்விசாரணைக் குழு விசாரித்து வரும் நிலையில், டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்கச் சென்ற உதயநிதி ஸ்டாலின் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தவறான கருத்துகளை வெளியிட்டு வருவதாக முறையிட்டார்.
நீதிபதி தெரிவித்த கருத்து:
இதனைக் கேட்ட நீதிபதி, உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் வீடியோக்களில் தவறான கருத்து அல்லது வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பாதிக்கும் வகையில் இருந்தால் அவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
#UdhayanidhiStalin #MadrasHighCourt #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive