மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் என்றும் நினைவில் நிறுத்தி, அவர்களின் நினைவிடங்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் பல்வேறு சமூகப் பணிகள் முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில், கிளிநொச்சி, கனகபுரத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு லண்டனில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் (London Sri Karpaga Vinayagar Temple) சார்பாக தென்னம்பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எதிர்காலத்தில் வளர்ந்து பயன்தரும் மரங்களாக உருவெடுப்பதுடன், மாவீரர் துயிலும் இல்லத்தின் பசுமையையும் இயற்கைச் சூழலையும் மேம்படுத்தும் வகையில் அமையும்.