வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு; அனைத்து பல்கலை தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்தம்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (25) முழுப் பல்கலைக்கழகக் கட்டமைப்பிலும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்படவுள்ளதாக அக்குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் பல்கலைக்கழகங்களில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அவர்களது கன்னி வரவு செலவுத் திட்டத்திலிருந்து தொடர்ந்து பல்கலைக்கழக சமூகத்திற்கு இருந்த உரிமைகளை வெட்டிக் குறைத்தமையே இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.

பேச்சுவார்த்தைகளின் போது இவர்கள் ஏற்றுக்கொண்ட அந்த இணக்கப்பாடுகளுக்கான திருத்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதேபோன்று 2027 வரவு செலவுத் திட்டத்திலும் பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் நெருக்கடிகள் ஏற்படும் வகையிலேயே இவர்கள் செயற்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக, தற்போதைய ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவேனும் தீர்த்து வைக்குமாறு நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே, உடனடியாகத் தலையிட்டு உங்களது அரசாங்கத்தினால் பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் நாம் மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், இதற்கு மிக விரைவில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அதற்கமைய இன்றைய தினமும் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அதேபோன்று பிரதான ஒன்பது தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கொழும்புக்கு வருகை தருவார்கள். அதற்கமைய உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வுகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2026-11-26 at 09.25.11

வீரத்தின் அடையாளமாய், தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்…

November 26, 2026

மாவீரர் நாள் நினைவேந்தல் 2026 நிகழ்வு நாளை நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி முதல் Mississaugaவில்

ESWATINI-768x432

இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை

November 26, 2026

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது உள்ளூர் சமூகத்திற்கோ அறிவிக்கப்படாத இரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம், இலங்கை அகதியும் பாலியல் குற்றவாளியுமான நபரொருவரை

WhatsApp Image 2026-11-25 at 09.49.26

பிரித்தானியா Knighthood கௌரவத்தை பெற்ற பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா இலங்கை விஜயம்!

November 26, 2026

வின்ட்சர் கோட்டையில் பிரித்தானியாவின் நைட்ஹூட் (Knighthood) கௌரவத்தை பெற்ற இலங்கையில் பிறந்த கல்வியாளர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, அவர்

WhatsApp Image 2026-11-26 at 08.26.10

வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு!

November 26, 2026

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வுக்காக வல்வெட்டித்துறையில் அவரின் இல்லம் தயாராக உள்ளதாக ‘உடுப்பிட்டி செய்திகள்’

photo-collage.png (1)

சுவிசில் மாவீரர் பெற்றோர்,உரித்துடையோர் மதிப்பளிப்பு  

November 26, 2026

சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரின் ஹொக்பெல்டன் (Hochfelden) பகுதியில் ‘மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வானது மணிக்கு நடைபெற்றது.

uk

பிரித்தானியாவிலிருந்து இரகசிய ஒப்பந்தத்தின் கீழ் ஆபிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி தற்கொலை?

November 26, 2026

பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட இலங்கைப் பிரஜை, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத

fsfsfds

கானி (Kaani) புயலின் முழுப் பாதிப்பு வலயத்திற்குள் இலங்கை?

November 26, 2026

மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட

tha

இனப்படுகொலை நடைபெற்றதை ஐ. நா. சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது

November 26, 2026

தமிழர்களுக்கு இனப்படுகொலை நடைபெற்றது என்பதை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது என

Minnal

23 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

November 26, 2026

23 மாவட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய அநுராதபுரம், அம்பாறை,

mata

விமான நிலையத்தில் வெடி குண்டுப் பீதி

November 26, 2026

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ‘அசூர் எயார்’ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம்

8

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி உண்மைக்குப் புறம்பான தகவல் – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு”

November 25, 2026

சென்னை: மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து

the

மாவீரர் துயிலும் இல்ல பசுமைத் திட்டத்திற்கு லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் உதவி

November 25, 2026

மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் என்றும் நினைவில் நிறுத்தி, அவர்களின் நினைவிடங்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர்