80, 90 வயதிலும் சமூக ஊடகங்களில் சாதிக்க முடியுமா? முடியும் என்று நிரூபிக்கின்றனர் சில பாட்டிகள்! அமெரிக்காவைச் சேர்ந்த 96 வயது Lillian Droniakகிற்கு 15 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
முதியோர் இல்லத்தில் விருந்துகள் நடத்தியதால் வெளியேற்றப்படுவதாக மிரட்டப்பட்ட அவர், இணையத்தில் பிரபலமானார்.
சமூக ஊடக வருமானத்தைக் கொண்டு மாதந்தோறும் 12,000 அமெரிக்க டாலர் முதியோர் இல்லக் கட்டணத்தைச் செலுத்துகிறார்.
“முதுமையிலும் வாழ்க்கையை ரசிக்கலாம் என்பதே இளையர்களுக்குத் தாம் சொல்ல விரும்பும் செய்தி,” என்று அவர் கூறினார்.
பிரிட்டனைச் சேர்ந்த 82 வயது Viv Truran கணவரின் மறைவுக்குப் பிறகு தமது வண்ணமயமான ஆடைகளைக் காணொளிகளாகப் பதிவிடத் தொடங்கினார் இப்போது விளம்பரங்கள் மூலமும் சம்பாதிக்கிறார்.
83 வயது Nonna Gracie, பாரம்பரிய இத்தாலியச் சமையலைக் கற்றுக்கொடுத்து மில்லியன்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
“உலகெங்குமிருந்து வரும் அன்பான செய்திகளைப் படிக்கும்போது கண்ணீர் வருகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
“இத்தகைய பாட்டிகள் இணையவாசிகளுக்கு ஆறுதலளிக்கும் மெய்நிகர்ப் பாட்டிகளாகத் திகழ்கின்றனர்,” என்றும் தெரிவித்துள்ளார்.