பூமியில் இருந்து ஒரு ஒளி நாள் தூரத்தைக் கடந்த Voyager -1 விண்கலம்!

மனித வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது மனிதர்களுக்கு எப்போதுமே வானம், நட்சத்திரங்கள், விண்வெளி, பிரபஞ்சம் பற்றி ஆர்வமும், கேள்விகளும் இருந்து கொண்டேதான் இருந்தது என்பது நமக்கு தெரியவருகிறது. பண்டைய கிரேக்க, எகிப்திய, சீன மற்றும் இந்திய மக்கள் தங்களது இதிகாசங்களிலும், புராணக் கதைகளிலும் ஏராளமான வானியல் நிகழ்வுகள் குறித்து பதிவு செய்துள்ளனர்.

தொழில்நுட்பம் வளரத் தொடங்கிய பிறகு விண்வெளி ஆய்வும் பல கட்டங்களாக முன்னேறியது. தொலைநோக்கி கண்டறியப்பட்ட பிறகு நமது சூரியக் குடும்பம் பற்றிய தெளிவு நமக்கு கிடைக்கத் தொடங்கியது. 20-ம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விண்வெளி ஆய்வுத் துறையில் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டன.

அதன் விளைவாக மனிதன் முதன் முதலில் நிலாவில் கால் வைத்தான். நிலவில் கால் பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங், “ஒரு மனிதனுக்கு இது மிகச்சிறிய காலடி, மனித இனத்திற்கு இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்” என்றார். அவர் கூறியபடி, விண்வெளி ஆய்வில் மனித இனம் இன்று அளப்பரிய வளர்ச்சிகளை கண்டு வருகிறது.

அந்த வகையில், மனிதர்கள் உருவாக்கிய ஒரு விண்கலம் பூமியில் இருந்து 2,590 கோடி கிலோ மீட்டர் தொலைவை கடந்து சென்றுள்ளது. ‘வொயேஜர் 1’ (Voyager) விண்கலம் வியாழன்(Jupiter) மற்றும் சனி(Saturn) கோள்களை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 1977-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் 49 ஆண்டுகளாக விண்வெளியில் பயணம் செய்து வரும் நிலையில், 18ஆம் திகதி (இன்று) அது பூமியில் இருந்து ஒரு ‘ஒளி நாள்’ தொலைவை கடந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் பூமியில் இருந்து இவ்வளவு தொலைவை கடப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒளி(Light) ஒரு வினாடியில் சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் செல்கிறது. ஒரு நிமிடத்தில் சுமார் 1 கோடியே 80 லட்சம் கிலோ மீட்டரும், ஒரு மணி நேரத்தில் சுமார் 108 கோடி கிலோமீட்டரும் செல்கிறது. இதே வேகத்தில் 24 மணி நேரம் சென்றால் சுமார் 2,590 கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும். இதுதான் ஒரு ஒளி நாள்.

அதாவது, 1977-ம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்ட ‘வொயேஜர் 1’, தற்போது வரை 49 ஆண்டுகள் 74 நாட்கள், அதாவது 17,971 நாட்கள் பயணம் செய்து, இன்று (18) பூமியில் இருந்து சுமார் 2,590 கோடி கிலோ மீட்டர் தொலைவை அடைகிறது.

இப்போது பூமியில் இருந்து ‘வொயேஜர் 1’ விண்கலத்திற்கு ஒளியின் வேகத்தில் அனுப்பப்படும் தகவல், அங்கு சென்றடைய சுமார் 24 மணி நேரம் ஆகும். அதேபோல், ‘வொயேஜர் 1’ விண்கலத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்படும் தகவல் இங்கு வந்து சேரவும் சுமார் 24 மணி நேரம் ஆகும். எனவே, ஒரு தகவலை அனுப்பி அதற்கான பதிலை பெற சுமார் 2 நாட்கள் ஆகும்.

‘வொயேஜர் 1’ விண்கலத்திற்கு தேவையான மின்சாரம், புளூட்டோனியம்-238 மூலம் இயங்கும் கருவியில் இருந்து கிடைக்கிறது. இந்த மின்சாரம் ஆண்டுதோறும் குறைந்து வருவதால், மின்சாரத்தை சேமிக்க தேவையில்லாத சில கருவிகளை நாசா படிப்படியாக நிறுத்தி வருகிறது. எனவே பூமிக்கும், வொயேஜர் 1-க்கும் உள்ள சிக்னல் தொடர்பு 2030-ம் ஆண்டு முழுமையாக நின்றுவிடும் என கூறப்படுகிறது.

ஆனாலும் வொயேஜர் 1 விண்வெளியில் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கும். சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அது ‘ஏசி+79 3888’ என்ற நட்சத்திரத்தின் அருகே செல்லும் என்று நாசா கூறுகிறது. அந்த நட்சத்திரத்தை அடையாமல், அதிலிருந்து சுமார் 1.7 ஒளியாண்டு தொலைவில் கடந்து செல்லும். பூமியுடன் தொடர்பு இல்லாத நிலையிலும், வொயேஜர் 1 தொடர்ந்து விண்வெளியில் பயணம் செய்துகொண்டே இருக்கும். அதன் பயணத்திற்கு முடிவே இல்லை.

‘வொயேஜர் 1’ விண்கலத்தில் இருக்கும் மற்றொரு சுவாரஸ்யம், அதில் வேற்றுகிரகவாசிகளுக்கான தகவல் இடம்பெற்றிருப்பதுதான். இந்த பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்திலும் உயிர்கள் இருப்பதாக இதுவரை நாம் கண்டறியவில்லை.

ஆனால் ஒருவேளை ஏதாவது ஒரு கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் இருந்து, அவர்கள் ‘வொயேஜர் 1’ விண்கலத்தை கண்டறிந்தால், அவர்களுக்கு மனிதர்கள் பற்றியும், நமது பூமியைப் பற்றியும் தகவல் தெரிவிப்பதற்காக விஞ்ஞானிகள் ஒரு சிறப்பான ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.

‘வொயேஜர் 1’ விண்கலத்தில், தங்க முலாம் பூசப்பட்ட 12-அங்குல ‘தாமிர வட்டு’(Golden Record) இணைக்கப்பட்டுள்ளது. அதில் பூமியின் இயற்கை ஒலிகள், பறவைகளின் சத்தம், 55 மொழிகளில் வாழ்த்துகள்(தமிழிலும் உள்ளது), மற்றும் 115 புகைப்படங்கள் டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன.

வானியலாளர் கார்ல் சேகன்(Carl Sagan) தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பதிவுகள், விண்வெளியில் ‘வொயேஜர் 1’ விண்கலத்தை இடைமறிக்கக்கூடிய எந்தவொரு அறிவார்ந்த வேற்றுக்கிரக நாகரிகத்திற்கும், பூமியின் வாழ்க்கை, அறிவியல் மற்றும் கலாசாரத்தைப் பற்றி எடுத்துரைக்கும் ஒரு தகவல் பெட்டகமாகச் செயல்படும் என்று கருதப்படுகிறது.

IMG_2207

மாலதி நினைவேந்தல் விசாரணை: முன்னிலையாகும் கஜேந்திரன்

November 19, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான விசாரணைக்காக, யாழ்ப்பாணம்

IMG_2206

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வில் திடீர் மாற்றம்!

November 19, 2026

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, நாளை (20) அனைத்து

IMG_2205

காற்று மாசு தீவிரம் விமான சேவைகள் ரத்து

November 19, 2026

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று (19)

IMG_2190

நாட்டில் பரவும் வைரஸ் தொற்று

November 19, 2026

நாட்டில் இன்புளுவென்சா (Influenza) சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி

IMG_2192

முன்பதிவு இல்லாமல் சேவை கிடையாது! வெளியான அறிவிப்பு

November 19, 2026

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) நாரஹேன்பிட்ட தலைமையகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுச் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல்

QHA3DAQJHBEYLKIRSSJSR437IE

50 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திற்குப் பின்னர் பிரிட்டிஷ் கொலம்பியா சிறையில் 81 வயது தொடர் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி மரணம்

November 19, 2026

1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் அல்பெர்ட்டாவில் (Alberta) மூன்று பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியாவின்

hamilton poli

டொரொண்டோவில் இனவெறித் தாக்குதல் நடத்தி மக்களை வாகனத்தால் மோதப் போவதாக மிரட்டிய நபர் கைது: ஹாமில்டன் காவல்துறை

November 19, 2026

இனத்தின் அடிப்படையில் டொரொண்டோவில் உள்ள மக்களை வாகனத்தால் மோதிக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தனது சமூக நலப் பணியாளரிடம் (social worker)

7D6TYEWCWFGWDAAIRAA4GWZJAQ

கனடாவில் அதிகம் தேடப்படும் முதல் 25 குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு; முதல் மூன்று இடங்களில் இரண்டைப் பிடித்த டொரொண்டோ 

November 19, 2026

கனடாவில் அதிகம் தேடப்படும் முதல் 25 குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு; முதல் மூன்று இடங்களில் இரண்டைப் பிடித்த டொரொண்டோ டொரொண்டோ

exa

டிசம்பர் 8 சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்

November 19, 2026

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி

cheran

சேரன்- ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களுக்கு ஒப்பற்ற துணிச்சலுடனும் தார்மீகத் தெளிவுடனும் குரல் கொடுத்தார்-கனடியத் தமிழர் பேரவை

November 19, 2026

பேராசிரியரும் கவிஞருமான உருத்திரமூர்த்தி சேரன் அவர்களின் மறைவிற்கு உலகளாவிய தமிழ் சமூகத்துடனும் அறிவுய்திக் குமுகத்துடனும் இலக்கிய ஆர்வலர்களுடனும் இணைந்து கனடியத்

8

“ராஜபக்சே போல விஜய்யை தமிழக மக்கள் ஓடவிடுவார்கள்!” – திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!

November 19, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், திருச்செந்தூர் அரோகரா விவகாரம், சட்டம் ஒழுங்கு மற்றும்

toi

கிளிநொச்சி வைத்தியசாலை மலசல கூடங்களின் அவல நிலை…

November 19, 2026

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள மலசல கூடங்கள் மிக மோசமான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் இலங்கை மனித