பாடசாலைக் கல்விச் சான்றிதழ் சர்ச்சை : இந்தோனேசிய உப ஜனாதிபதி இராஜினாமா

தனது உயர்தரப் பாடசாலைக் கல்விச் சான்றிதழின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சைகளைத் தொடர்ந்து, இந்தோனேசிய உப ஜனாதிபதி கிப்ரான் ரகபுமிங் ராகா (Gibran Rakabuming Raka) தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தமை ஆகியவற்றை முன்னிறுத்தி, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக ஏ.எஃப்.பி (AFP) செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

39 வயதான கிப்ரான், அந்நாட்டு வரலாற்றில் மிக இளம் வயது உப ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னதாகவே, தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோ மற்றும் பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோ, “மிகுந்த மனவருத்தத்துடன் நான் இந்த இராஜினாமாவை ஏற்றுக்கொள்கின்றேன்; நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி அவர் எடுத்துள்ள இத்தீர்மானத்தைப் பாராட்டுகின்றேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள கிப்ரான் ரகபுமிங், இது தனது தனிப்பட்ட தீர்மானம் எனவும், உயர்தரப் பாடசாலைச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சைக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் தான் பூர்த்தி செய்த அனைத்துக் கல்வி ஆவணங்களும் சட்டபூர்வமாகத் தன்னிடம் உள்ளதாகவும், அவை ஏற்கெனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் பாடசாலைக் கல்வியைப் பெற்று, பின்னர் சந்தைப்படுத்தல் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ள கிப்ரான், 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டபோது தனது வெளிநாட்டுக் கல்வித் தகைமைகள் இந்தோனேசியாவின் தொழிற்கல்வி உயர்தரப் பாடசாலைக் கல்விக்குச் சமமானவை எனக் குறிப்பிடும் சான்றிதழொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

ஆயினும், கடந்த மாதம் இந்தோனேசிய உயர் நீதிமன்றம் (உச்ச நீதிமன்றம்) குறித்த ஆவணத்தை இரத்துச் செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தோனேசிய அரசியலமைப்பிற்கு அமைய, வெற்றிடமாகியுள்ள உப ஜனாதிபதி பதவிக்காக இரு பெயர்களைப் பரிந்துரைப்பதற்கு ஜனாதிபதிக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தினால் புதிய உப ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

கிப்ரான் ரகபுமிங், 2014 முதல் 2024 வரை இந்தோனேசியாவில் இரு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த பிரபல அரசியல்வாதியான ஜோக்கோ விடோடோவின் (ஜோகோவி) மூத்த புதல்வராவார். ஜனாதிபதித் தேர்தல்களில் எதிரணியினராகப் போட்டியிட்ட ஜோகோவி மற்றும் தற்போதைய ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் கூட்டணியின் விளைவாகவே, கிப்ரான் உப ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடப்பட்டிருந்தார்.

இதேவேளை, அண்மைய வாரங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கு மற்றும் நச்சுப் புகையை வெளியேற்றியவாறு பல மாதங்களாக நீடித்த அழிவுகரமான காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியமை ஆகியவற்றைக் கண்டித்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் பாரிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும், ஜனாதிபதியின் தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக ஒட்டுக்கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கைது செய்யப்பட்டு, இராஜதுரோகக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி பிரபோவோவின் அரசாங்கம் கடும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. கிப்ரானின் இராஜினாமாவுடன், ஜோகோவி தரப்பினருக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் நிலவும் கூட்டணியின் அதிகாரச் சமநிலையில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

sava

தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு; சாவகச்சேரியில் விபத்து!

November 14, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் – பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில்

image_2bf71ea038

பாடசாலைக் கல்விச் சான்றிதழ் சர்ச்சை : இந்தோனேசிய உப ஜனாதிபதி இராஜினாமா

November 14, 2026

தனது உயர்தரப் பாடசாலைக் கல்விச் சான்றிதழின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சைகளைத் தொடர்ந்து, இந்தோனேசிய உப ஜனாதிபதி கிப்ரான்

jud

நீதித்துறை சுயாதீனத்தை வலியுறுத்தித் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு

November 14, 2026

திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் வழங்கிய சட்டபூர்வப் பிடியாணை உத்தரவை விமர்சித்து, கௌரவ மன்றையும் நீதிபதியையும் அவமதிக்கும்

us

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் தடை நீக்கம்!

November 14, 2026

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்துச் செயலாளர் ஷோன்

ss

தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் ரூ. 200 கோடி போதைப்பொருள்!

November 14, 2026

இலங்கைக்குத் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஏற்றிய மீன்பிடிப் படகு நேற்று (13) காலி துறைமுகத்திற்குக்

teaf

ஆசிரியர் மீது மாணவன் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பார்ட்டம்

November 14, 2026

திருகோணமலை, அபயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தின்போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில்

tho

’தேஹிபாலே மல்லி’ ஜோர்ஜியாவில் கைது

November 14, 2026

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் தென்பகுதியின் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான படபெந்தி மத்துமகே

th

திருவள்ளுவர் சிலை தென் கொரியாவில் திறப்பு

November 14, 2026

​கொரியத் தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்

For em

ஏமாற்றப்பட்ட 40 இலங்கையர்களுக்கு உதவி?

November 14, 2026

சவூதி அரேபியாவில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 40 இலங்கைப் பணியாளர்களுக்கு, அவர்களுக்குரிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக சுமார் 569

lau

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

November 14, 2026

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய,

image_8ee04cb420

நாமலின் கிரிஷ் விசாரணை; இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கோரல்

November 14, 2026

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி

8

“திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2,200 கோடி ஊழல்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

November 13, 2026

சென்னை: திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் பேட்ச் ஒர்க் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு