இலங்கைக்குத் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஏற்றிய மீன்பிடிப் படகு நேற்று (13) காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த மீன்பிடிப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 06 சாக்குப் பைகளில் இருந்து 52 ஹெரோயின் பொதிகளையும், 50 ‘ஐஸ்’ (மெத்தம்பெட்டமைன்) போதைப்பொருள் பொதிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட இந்தப் போதைப்பொருள் தொகையின் பெறுமதி 200 கோடி ரூபாவிற்கும் அதிகமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருள் தொகையைத் தற்போது நிறைபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.