மத்திய வொஷிங்டன் டி.சி.யில் (Washington DC) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்; இதனை “தொடரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவஎன அவர்கள் விவரித்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் தற்போதைய நிலைமை குறித்துத் தமக்கு இதுவரை எதுவும் தெரியாது எனப் பொலிஸ் அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
உடற்பயிற்சிக் கூடம் (gym) ஒன்றிற்கு உள்ளேயும் அதற்கு அருகிலும் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. உடற்பயிற்சிப் பந்தொன்று (exercise ball) வெடித்த சத்தம் என்றே தான் முதலில் நினைத்ததாகவும், ஆனால் உண்மையில் அங்கு ஒருவர் சுடப்பட்டிருந்ததாகவும் நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார்.
வடமேற்குப் பகுதியிலுள்ள 15 ஆவது மற்றும் பி வீதி (15th and P Street, Northwest) சந்திப்பில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதைப் புகைப்படங்கள் காட்டுகின்றன. “இந்தச் சம்பவம் துப்பாக்கிதாரி ஒரு இடத்திற்குள் பதுங்கியுள்ள சூழ்நிலையை (barricade situation) ஏற்படுத்தியுள்ளது” எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.