மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்களை ஆவணப்படுத்தி, விரிவான புத்தகமொன்றைத் தயாரிக்கும் நோக்கில் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது முழுமையான தகவல்களை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் சங்கத்தின் தலைவியிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இத்தகவலை தங்களுக்குத் தெரிந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடனும் பகிர்ந்துகொண்டு, அவர்களும் இந்தத் தரவுச் சேகரிப்பு நடவடிக்கையில் இணைந்துகொள்ள உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சங்கத்தின் தலைவியிடம் தங்களது விபரங்களைச் சமர்ப்பித்தவர்கள் மீண்டும் அவற்றை வழங்க வேண்டிய அவசியமில்லை. எழுத முடியாதவர்கள் தங்களது விபரங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து அனுப்ப முடியும்.
மேலும், பிரதேசத் தலைவியர்கள் தத்தமது பகுதிகளில் வசிக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் இத்தகவல் சென்றடைவதை உறுதிப்படுத்தி, தரவுகள் உரிய காலத்திற்குள் சேகரிக்கப்படுவதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதேவேளை, தத்தமது பகுதிகளில் உள்ள மக்களுக்கு இத்தகவல் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அந்தந்தப் பகுதி மற்றும் பிரதேசத் தலைவியர்களுக்கு உரியது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் இந்த முக்கியமான முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்