வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன், இத்திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், விவசாயம், மீன்பிடி, காணிப் பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் சமூகங்களின் நலன்களை முழுமையாகக் கருத்திற்கொண்டு திட்டமிட வேண்டும் என வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கான மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு தொடர்பான முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் இன்று (11.11.2026) புதன்கிழமை கொழும்பிலுள்ள மின்சக்தி அமைச்சில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வழிகாட்டல் குழுவின் உறுப்பினரான வடக்கு மாகாண  ஆளுநர், ஆளுநர் செயலகத்திலிருந்து இணையவழி ஊடாகப் பங்கேற்று தனது கருத்துகளை முன்வைத்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் முன்னெடுக்கப்படும் இவ்வாய்வு, வடக்கு மாகாணத்தின் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் தரையில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான சாத்தியமான பகுதிகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை நிலைபேறான எரிசக்தி அதிகார சபை இத்திட்டத்தின் செயற்பாட்டு நிறுவனமாகவும், மத்திய சுற்றாடல் அதிகார சபை அங்கீகார நிறுவனமாகவும் செயற்படுகின்றன. ஜப்பானைச் சேர்ந்த ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் நிறுவனம், இலங்கையின் ஆலோசனைப் பொறியியலாளர்கள் மற்றும் கட்டடக்கலைஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இவ்வாய்வில், ஏற்கெனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பகுதிகளும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய தேசியத் திட்டங்களின் கீழ் சாத்தியமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. 2026–2030 காலப்பகுதியை மையமாகக் கொண்ட எரிசக்தி அபிவிருத்தித் திட்டமிடலை 2040ஆம் ஆண்டு வரையான நீண்டகால நோக்கிலும் ஆராய்வதற்கான அணுகுமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முக்கிய நோக்கம் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ஏற்ற பகுதிகளை அடையாளம் காண்பது மாத்திரமல்ல, அத்தகைய அபிவிருத்திகளால் ஏற்படக்கூடிய சுற்றாடல், சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிட்டு, பொருத்தமான திட்டமிடல் வழிகாட்டல்களை உருவாக்குவதுமாகும். இதன் அடிப்படையில், மேம்பாட்டுக்கு அனுமதிக்க முடியாத பகுதிகள், கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே மேம்படுத்தக்கூடிய பகுதிகள், தேவையான தாக்கத் தணிப்பு நடவடிக்கைகளுடன் மேம்படுத்தக்கூடிய பகுதிகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தக்கூடிய பகுதிகள் எனப் பகுதிகளை வகைப்படுத்துவதற்கான ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாய்வில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக உணர்திறன் கொண்ட பல்வேறு அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட பகுதிகள், உணர்திறன் மிக்க வாழிடங்கள், புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதைகள் மற்றும் இயற்கைச் சூழல்களின் தொடர்பிணைப்பு ஆகியவை சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய அம்சங்களாகக் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அதேபோன்று, குடியிருப்புகள், காணி உரிமை மற்றும் பயன்பாடு, விவசாயம், மீன்பிடி, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்கள் ஆகியவை சமூக ரீதியான மதிப்பீட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும், சூறாவளி, கடல்கொந்தளிப்பு, கடல் மட்ட உயர்வு மற்றும் வெள்ள அபாயங்கள் போன்ற காலநிலை மாற்றம் சார்ந்த ஆபத்துகளும், அபிவிருத்தித் திட்டங்கள், கரையோரப் பாதுகாப்பு எல்லைகள், கலாசார மரபுரிமை மற்றும் இயற்கை நிலத்தோற்றங்கள் மீதான தாக்கங்களும் மதிப்பீட்டில் உள்ளடக்கப்படுகின்றன. காற்று மற்றும் சூரிய வளங்களின் சாத்தியக்கூறுகளுடன் மின்விநியோகக் கட்டமைப்பு, மின்சாரப் பரிமாற்றப் பாதைகள் மற்றும் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளும் ஆராயப்படுகின்றன.
இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பங்குதாரர்களுடனான கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணக் கலந்தாய்வில் விவசாயம், மீன்பிடி, மக்களின் வாழ்வாதாரங்கள், சமூகக் காணிப் பயன்பாடு, சுற்றுலா, கலாசார மரபுரிமை மற்றும் காலநிலை அபாயங்கள் தொடர்பான உள்ளூர் மற்றும் பிராந்தியக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற கலந்தாய்வில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், பறவைகளின் இடம்பெயர்வு மற்றும் மோதல் அபாயங்கள், திட்டமிடல் அளவுகோல்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஆகிய தேசிய மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் ஆராயப்பட்டன.
இவற்றைத் தொடர்ந்து, கள ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே திரட்டப்பட்ட இடஞ்சார் தரவுகளைச் சரிபார்த்தல், உணர்திறன் மிக்க பகுதிகள் மற்றும் காலநிலை அபாயங்களை அடையாளம் காணுதல், சாத்தியமான அபிவிருத்தித் திட்டங்களால் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை மதிப்பிடுதல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறைந்த, நடுத்தர மற்றும் உயர்ந்த அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றின் ஒட்டுமொத்த சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்களும் ஆராயப்படும்.
ஆய்வின் நிறைவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு வலயங்களை அடையாளப்படுத்துவதுடன், அவற்றுக்கான மூலோபாய சுற்றாடல் முகாமைத்துவத் திட்டத்தையும் தயாரிப்பது எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்கால எரிசக்தி அபிவிருத்தித் திட்டங்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் தேசிய அபிவிருத்தி நோக்கங்களுடன் இணங்கிய வகையில் திட்டமிடுவதற்கான வழிகாட்டல் கட்டமைப்பை உருவாக்க முடியும்.
தேசிய எரிசக்திக் கொள்கையின் கீழ், 2030ஆம் ஆண்டளவில் மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்வதும், 2050ஆம் ஆண்டளவில் மின்சார உற்பத்தித் துறையில் காபன் நடுநிலையை அடைவதும் இலக்குகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேசிய இலக்குகளை அடைவதில் வடக்கு மாகாணத்தின் எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இக்கலந்துரையாடலில் தனது கருத்துகளை முன்வைத்த ஆளுநர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி என்பது மாகாணத்துக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளையும் பொருளாதார முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்கக்கூடியது எனத் தெரிவித்தார். அதனை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய திட்டங்களுக்காகக் காணிகள் அடையாளம் காணப்படும்போதும், அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்படும்போதும் அப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாதிருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, விவசாய நிலங்கள், மீன்பிடி வளங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழும் மக்களின் பொருளாதாரச் செயற்பாடுகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். மக்களின் காணிப் பயன்பாட்டு உரிமைகள், உள்ளூர் சமூகங்களின் தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்த பின்னரே பொருத்தமான அபிவிருத்திப் பகுதிகள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் எரிசக்தி அமைச்சின் செயலாளர் (பதில்) தலைமையில், மத்திய சுற்றாடல் அதிகார சபை, தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை நிலைபேறான எரிசக்தி அதிகார சபை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றன
5

“நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்கத் தயார்!” – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

November 12, 2026

ஈரோடு: எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தவெக அரசு முழுமையாகத் தயாராக உள்ளதாகத் தமிழக

4

“சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிம்பத்தை உருவாக்க திமுக முயற்சி!” – அமைச்சர் நிர்மல் குமார் சாடல்!

November 12, 2026

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற மாய பிம்பத்தை உருவாக்கப் பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து முயற்சி செய்து

3

“பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

November 12, 2026

சென்னை: பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை என்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக

2

“சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும்!” – கிருஷ்ணசாமி கெடு!

November 12, 2026

சென்னை: சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை நடிகர் கமல்ஹாசன் ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் எங்குப் படப்பிடிப்பு

1

“முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் மனு!” – விசாரணையை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

November 12, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல்

amalanayaki

மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கை – எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை

November 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்களை ஆவணப்படுத்தி, விரிவான புத்தகமொன்றைத் தயாரிக்கும் நோக்கில் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில்,

anura-Budget

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2027 வரவு செலவுத் திட்ட உரை: கடன் முகாமைத்துவம், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள், IMF எதிர்காலம்

November 12, 2026

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2027 ஆம் ஆண்டுக்கான

anura-Budget

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க2027 வரவு செலவுத் திட்ட உரை: கடன் முகாமைத்துவம், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள், IMF எதிர்காலம்

November 12, 2026

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார

ANojan-Sivarasa-family-AKD-1

நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம்” : ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி!

November 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர், அவரது

pol

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 23 பேர் கைது

November 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவப்

sdf

செட்டிகுளம் தனியார் காணிகள் மற்றும் குளங்களை விடுவிக்க விசேட பிரேரணை!

November 12, 2026

செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் புதன்கிழமை (11.11.2026) பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர்

dsf

நான்கு நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

November 12, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, விமல் சுரேந்திர, லக்சபான, கெனியன் மற்றும் மேல்