கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்கபொல, மாஹேன பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவரே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் நால்வர் படுகாயமடைந்து வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வான் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதையடுத்து பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வானின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்