கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிடத்தக்க அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெள்ளவத்தை, கோட்டை, மருதானை மற்றும் அலவ்வ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு அருகில் சமிக்ஞை அமைப்புகளில் (signals failure) ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.