“முதல்வர் விஜய்யை போன்று பலவீனமான முதல்வரை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை!” – மு.க.ஸ்டாலின்!

கோவை:

முதலமைச்சர் விஜய்யைப் போன்று மிகவும் பலவீனமான முதல்வரைத் தமிழகம் இதுவரை பார்த்ததில்லை எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இவரின் இந்தப் பேச்சு தற்போது அரசியல் களத்தில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் பிறந்தநாள் விழா:

கோவை வ.உ.சி மைதானத்தில் பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா மற்றும் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “இந்தக் கூட்டத்திற்கு வந்ததில் இருந்து மகிழ்ச்சியும் கூச்சமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். அந்த அளவுக்குப் பாராட்டையும் அன்பையும் பாசத்தையும் பொழிந்து இருக்கிறீர்கள். இது குழந்தைக்குத் தாய் கொடுப்பது போல, திமுகவுக்குத் தாய்க் கழகமான திராவிடர் கழகம் அளித்த அன்பு முத்தம். அறிவுப் புரட்சியின் மாபெரும் அடையாளமாக நூல்களையும் நூலகங்களையும் திமுக ஆட்சியில்தான் உருவாக்கியுள்ளோம்,” என்று பெருமையுடன் கூறினார்.

ஜோசியர் ஆட்சி:

தொடர்ந்து தவெக அரசைக் கடுமையாகச் சாடிய அவர், “திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைத் தற்போது முதலமைச்சர் விஜய் ஜோசியர் சொன்ன தேதியில்தான் திறந்து வைத்திருக்கிறார். முதலமைச்சர் என்ன உடை அணிய வேண்டும், என்ன பொட்டு வைக்க வேண்டும், அலுவலகம் எந்தத் திசையில் இருக்க வேண்டும் என்பதைக் கூட ஜோசியர் சொல்வதைக் கேட்டுத்தான் செய்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரே பவர் சென்டர்தான் என்று கூறினார். ஆனால், தற்போது அவருக்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் சென்டர்தான் முதல்வரை வைத்துக்கொண்டு அனைத்தையும் இயக்குகிறது. செயற்கையாக மின்வெட்டு நாடகம் நடத்தப்பட்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது,” என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

சினிமா சூட்டிங் இல்லை:

மேலும், “கோவையில் ஒரே மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளன, அது கொலை நகரமாக மாறி வருகிறது. சிறுமிகள் காணாமல் போகின்றனர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. தவெகவில் பாலியல் குற்றவாளிகளுக்கும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் தனித்தனிப் பிரிவுகள் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. முதலமைச்சர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைக்குச் செல்வதாக நினைத்துத் தலைமைச் செயலகம் வருகிறார். அதற்கும் சனி, ஞாயிறு விடுமுறை விட்டு விடுகிறார். முதலமைச்சர் அவர்களே, இது சினிமா சூட்டிங் இல்லை. விஜய்யைப் போன்று பலவீனமான முதல்வரைத் தமிழகம் இதுவரை பார்த்ததில்லை. திருச்சி தேர்தலைக் காரணமாக வைத்து முன்னாள் அமைச்சர் நேருவின் வீட்டில் மீண்டும் மீண்டும் சோதனை நடத்துகிறார்கள். திமுக எப்போதும் அச்சப்படாது, எங்களை அழுத்த அழுத்தத்தான் நாங்கள் மேலே எழுவோம். இதுதான் திமுகவின் டி.என்.ஏ,” என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

#MKStalin #CMVijay #DMK #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

canada immigr

2027 ஆம் ஆண்டில் குறைவான புலம்பெயர்வோரை வரவேற்கக் கனேடியர்கள் பெரும்பான்மையாக விருப்பம்: நானோஸ் (Nanos) ஆய்வு

November 5, 2026

புலம்பெயர்வு அளவுகளையும், வீட்டு வசதி, சேவைகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் அவற்றின் தாக்கத்தையும் நாடு தொடர்ந்து எதிர்கொண்டு வருவதால், அடுத்த

canada flag

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் கனடியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அமெரிக்கா மீதான நம்பிக்கை இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது

November 5, 2026

அமெரிக்க காங்கிரஸைக் (நாடாளுமன்றம்) ஜனநாயக கட்சியினர் முழுமையாகக் கைப்பற்றியதை பல கனேடியர்கள் வரவேற்றுள்ளனர்; இருப்பினும், தொடர்ந்து நடந்து வரும் வர்த்தகப்

google

இடைக்காலத் தேர்தல்களின் போது அதிகம் தேடப்பட்ட நாடாக கனடா திகழ்ந்துள்ளது: கூகுள் (Google)

November 5, 2026

கூகுள் டிரெண்ட்ஸ் (Google Trends) அறிக்கை ஒன்றின்படி, இடைக்காலத் தேர்தல்கள் குறித்து அமெரிக்காவை விட கனடாவில்தான் மற்றைய நாடுகளைக் காட்டிலும்

Tax Revenue 1-816277

இடைக்காலத் தேர்தல்களில் வரிகள் முக்கிய பங்கு வகித்தன: 

November 5, 2026

இடைக்காலத் தேர்தல்களில் வரிகள் முக்கிய பங்கு வகித்தன: கனடிய-அமெரிக்க அரசியல் ஆய்வாளரான டேவிட் ஃபிரம் (David Frum), செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

usa canada

இந்த முடிவுகள் கனடாவை எவ்வாறு பாதிக்கலாம்?

November 5, 2026

அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அன்று மிகப்பெரிய உள்நாட்டுத் தோல்வியைச் சந்தித்த போதிலும், கனடாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நீடித்து

3

“எதிர்க்கட்சிகளிடம் அனுமதி வாங்கி தான் முதல்வர் எங்கேயும் செல்ல வேண்டுமா?” – அமைச்சர் மரிய வில்சன் கேள்வி!

November 5, 2026

தூத்துக்குடி: எதிர்க்கட்சிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு முதலமைச்சர் விஜய் எங்கேயும் செல்ல வேண்டிய தேவையில்லை என நிதியமைச்சர் மரிய வில்சன் திட்டவட்டமாகத்

2

“தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை: கூட்டணிக் கட்சிகள் ஆதரவை திரும்பப் பெறமாட்டார்கள்!” – திருமாவளவன் பேட்டி!

November 5, 2026

மதுரை: தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை எனவும், கூட்டணிக் கட்சிகள் ஒருபோதும் தங்களது ஆதரவைத் திரும்பப் பெறமாட்டார்கள் எனவும் விடுதலைச்

1

“முதல்வர் விஜய்யை போன்று பலவீனமான முதல்வரை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை!” – மு.க.ஸ்டாலின்!

November 5, 2026

கோவை: முதலமைச்சர் விஜய்யைப் போன்று மிகவும் பலவீனமான முதல்வரைத் தமிழகம் இதுவரை பார்த்ததில்லை எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக்

ravi33

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி; துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும், மீளநிர்மாணிக்கவும் அரசு ஒத்துழைக்கவேண்டுமெனவும் வலியுறுத்து

November 5, 2026

மாவீரர்களுக்கு பாராளுமன்றில் அஞ்சலிசெலுத்திய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கோயில்களாகப் போற்றும் துயிலுமில்லங்களை இடித்தழிப்புச் செய்துவிட்டு, நாங்கள் தெய்வங்களாக

le blanc

எங்கள் கவனம் மாறவில்லை”: அமைச்சர் டொமினிக் லெப்ளான்

November 5, 2026

புதன்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளான் (Dominic LeBlanc), இடைக்காலத் தேர்தல் முடிவுகளைத்

trump june 26

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில்ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கனடா டிரம்ப்பின் தாக்கத்திற்கு முகங்கொடுக்கிறது

November 5, 2026

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி எதிர்பாராத பாரிய தோல்விகளைச் சந்தித்ததை

tin

TIN இலக்க கட்டாயமாக்கல் 2027 ஏப்ரல் வரை ஒத்திவைப்பு

November 5, 2026

குறிப்பிட்ட சில சேவைகளுக்காக TIN இலக்கத்தைக் (வரி செலுத்துபவர் அடையாள இலக்கம்) கட்டாயமாக்கும் நடைமுறையை அமுல்படுத்துவது 2027 ஏப்ரல் 1