பிற நாடுகளின் கடல் எல்லைகளில் கைதான 795 மீனவர்களில் 753 பேர் 66 படகுகளுடன் விடுவிப்பு

பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை 145 மீன்பிடிப் படகுகளுடன் 795 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 753 மீனவர்கள் 66 மீன்பிடிப் படகுகளுடன் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சார்பில் பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, மொத்தம் 49,271 மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவற்றில் 4,869 பதிவு செய்யப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகுகள், 880 ஒருநாள் மீன்பிடிப் படகுகள் (IDAY), வெளிப்புற இயந்திரங்களைக் கொண்ட 24,823 படகுகள் (OFRP), இயந்திரங்களைக் கொண்ட 2,709 பாரம்பரியப் படகுகள் (MTRB), இயந்திரங்கள் அற்ற 15,037 பாரம்பரியப் படகுகள் (NTRB) மற்றும் இயந்திரமற்ற கரைவலைப் படகுகள் (NBSB) 953 என்பன உள்ளடங்குவதாகத் தெரிவித்தார்.

இவற்றில் 4,869 பலநாள் மீன்பிடிப் படகுகளும் சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான சட்டபூர்வ அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சில சந்தர்ப்பங்களில், சீரற்ற காலநிலை, பலத்த காற்று அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மீன்பிடிப் படகுகள் பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சில படகுகளின் மீகாமர்கள் வேண்டுமென்றே பிற நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் பிரவேசித்து, அங்குள்ள மீன் வளங்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 7 மீன்பிடிப் படகுகளுடன் 40 மீனவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் கைது செய்யப்படும் மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் தொடர்பில், சம்பந்தப்பட்ட நாடுகளில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகங்கள் நேரடியாகச் செயற்படுவதாகவும், அதற்கமைய கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் தொடர்பில் தேவையான அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான தலையீடுகளையும் அந்தந்தத் தூதரகங்கள் மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அனர்த்தங்களுக்கு உள்ளாகும் படகுகள் உள்ளிட்ட ஏனைய மீன்பிடிப் படகுகள் தொடர்பான தேவையான தொழில்நுட்ப அறிக்கைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வழங்குவதாகவும், சில சந்தர்ப்பங்களில் மீனவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விமானப் பயணச்சீட்டுகளைக்கூட அத்திணைக்களம் வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

image_f49bb52300

அமெரிக்க செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம்!

November 5, 2026

மிச்சிகன் மாநிலத்தின் காலியாக உள்ள அமெரிக்க செனட் இடத்திற்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயத் வெற்றி பெற்றுள்ளார். இதன்

image_afd48943ae

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்

November 5, 2026

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை (Protection of the State from Terrorism) உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கட்டுநாயக்க

jud

பிற நாடுகளின் கடல் எல்லைகளில் கைதான 795 மீனவர்களில் 753 பேர் 66 படகுகளுடன் விடுவிப்பு

November 5, 2026

பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 23 ஆம்

dumi

துமிந்தவுக்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு…

November 5, 2026

அண்மையில் வீட்டுத் தொகுதியொன்றில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க

tru

இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி

November 5, 2026

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் காங்கிரஸின் செனட் சபையின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஜனநாயகக் கட்சியால் முடிந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

rain

பலத்த மழைக்கு வாய்ப்பு

November 5, 2026

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

f

பிரான்ஸில் இரத்த வங்கிகள் மீது சைபர் தாக்குதல்

November 5, 2026

பிரான்ஸில் உள்ள மூன்று பிராந்திய இரத்த வங்கிகளின் குளிர்சாதனப் பெட்டிகளைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்

MediaFile_20261104_101558_153

கோட்டாபய வெளிநாட்டுப் பயணத் தடை; தீர்ப்புத் திகதி அறிவிப்பு!

November 4, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான தீர்ப்பை எதிர்வரும்

trump carney 1

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டை டிரம்பின் குடியரசுக் கட்சி இழந்தது: இது கனடாவிற்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

November 4, 2026

கனடாவும் அமெரிக்காவும் தொடர்ச்சியான வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மாபெரும்

8

“எம்.எல்.ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?” – உதயநிதி கேள்வி!

November 4, 2026

சென்னை: எம்.எல்.ஏ-க்களை வாங்கத் தெரிந்த முதலமைச்சருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியான தவெக

6

“2029 அல்ல… உங்கள் எதிர்காலமே இலக்கு!” – கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேச்சு!

November 4, 2026

சென்னை: 2029 தேர்தல் இலக்கல்ல, உங்களின் எதிர்காலமே முக்கியம் என கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய

7

“அதிமுகவை தேவையின்றி இழுத்துப் பேச வேண்டாம்!” – தவெக அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!

November 4, 2026

சென்னை: தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுக மற்றும் திமுக மாபெரும் கூட்டுச் சதி செய்வதாகத் தவெக தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு