ஈரானிய கப்பல் பணியாளர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பிய விவகாரம் – அமெரிக்க தடைகளை எதிர்கொள்கின்றதா இலங்கை

ஐக்கிய நாடுகள் கடல்சட்ட உடன்படிக்கையின் கீழ் ஈரானை சேர்ந்த 40 கப்பல்பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களை அவர்களது நாட்டிற்கு இலங்கை திருப்பிஅனுப்பியமை போன்ற நடவடிக்கைகளால் இலங்கை தடைகளை எதிர்கொள்ளும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
ஆங்கில ஊடகமொன்றின் மின்னஞ்சல் கேள்விக்கு பதிலளித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கு எரிபொருள் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சேவைகளை வழங்குவது அல்லது பணியாளர்களை மாற்றுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் அந்த நாடு அமெரிக்காவின் தடையை எதிர்கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய ஆட்சியின் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி மற்றும் ஆதரவை வழங்கும், அவர்களின் இராணுவ மற்றும் ஆயுதஅதிகரிப்பு நடவடிக்கைகள் கொள்வனவு நடவடிக்கைகள் தீங்கிழைக்கும் இணையச்செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோதமான எண்ணெய் வர்த்தகம் ஆகியவற்றை அமெரிக்கா தொடர்ந்தும் சீர்குலைக்கும்,அம்பலப்படுத்தும், முடக்கும்,என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பொறுப்புககூறவைப்பதில் சர்வதேச சமூகம் எங்களுடன் இணையவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே – இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களின் 40 பணியாளர்கள் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கியதுடன் அவர்களை விமானம் மூலம் ஈரானிற்கு திருப்பியனுப்பியிருந்தது.

1

“முதல்வர் விஜய்யை போன்று பலவீனமான முதல்வரை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை!” – மு.க.ஸ்டாலின்!

November 5, 2026

கோவை: முதலமைச்சர் விஜய்யைப் போன்று மிகவும் பலவீனமான முதல்வரைத் தமிழகம் இதுவரை பார்த்ததில்லை எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக்

ravi33

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி; துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும், மீளநிர்மாணிக்கவும் அரசு ஒத்துழைக்கவேண்டுமெனவும் வலியுறுத்து

November 5, 2026

மாவீரர்களுக்கு பாராளுமன்றில் அஞ்சலிசெலுத்திய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கோயில்களாகப் போற்றும் துயிலுமில்லங்களை இடித்தழிப்புச் செய்துவிட்டு, நாங்கள் தெய்வங்களாக

le blanc

எங்கள் கவனம் மாறவில்லை”: அமைச்சர் டொமினிக் லெப்ளான்

November 5, 2026

புதன்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளான் (Dominic LeBlanc), இடைக்காலத் தேர்தல் முடிவுகளைத்

trump june 26

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில்ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கனடா டிரம்ப்பின் தாக்கத்திற்கு முகங்கொடுக்கிறது

November 5, 2026

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி எதிர்பாராத பாரிய தோல்விகளைச் சந்தித்ததை

tin

TIN இலக்க கட்டாயமாக்கல் 2027 ஏப்ரல் வரை ஒத்திவைப்பு

November 5, 2026

குறிப்பிட்ட சில சேவைகளுக்காக TIN இலக்கத்தைக் (வரி செலுத்துபவர் அடையாள இலக்கம்) கட்டாயமாக்கும் நடைமுறையை அமுல்படுத்துவது 2027 ஏப்ரல் 1

womenArrest_1200px_22_11_21-1000x600-1

பண மோசடி; நீதிமன்றால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் கைது

November 5, 2026

வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது

jud

ரகித்த ராஜபக்ஷவின் வங்கி கணக்குகளுக்கு 3 மாத தடை

November 5, 2026

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் முடக்கப்பட்ட, சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வங்கிச் கணக்குகள் மற்றும் வாகனங்களை மூன்று மாத

mark carney55

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள்: வரி நிவாரணம் பெறுவதில் நம்பிக்கைக் கொண்டுள்ள கனடியர்களுக்கு இது ஒரு ‘வெற்றி

November 5, 2026

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் முடிவானது கனடாவில் பலரும் எதிர்பார்த்த ஒன்றாக அமைந்தது. அதாவது, அமெரிக்காவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிகள் மீது

image_f49bb52300

அமெரிக்க செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம்!

November 5, 2026

மிச்சிகன் மாநிலத்தின் காலியாக உள்ள அமெரிக்க செனட் இடத்திற்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயத் வெற்றி பெற்றுள்ளார். இதன்

image_afd48943ae

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்

November 5, 2026

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை (Protection of the State from Terrorism) உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கட்டுநாயக்க

jud

பிற நாடுகளின் கடல் எல்லைகளில் கைதான 795 மீனவர்களில் 753 பேர் 66 படகுகளுடன் விடுவிப்பு

November 5, 2026

பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 23 ஆம்

dumi

துமிந்தவுக்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு…

November 5, 2026

அண்மையில் வீட்டுத் தொகுதியொன்றில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க