நாட்டின்; பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மி.மீ-க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.