சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையின் 9 மாவட்டங்களில் சேதமடைந்த 9 பாலங்களைப் புதிதாக நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், கம்பஹா – பெம்முல்ல பகுதியில் அமைந்துள்ள 5/3 இலக்கப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவா ஷியாங் மற்றும் அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் பெம்முல்லையில் நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் கம்பஹா, கேகாலை, குருநாகல், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் சேதமடைந்த ஒன்பது பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்காக சீன அரசாங்கத்தின் நிதியுதவியாக மொத்தம் 3,933 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வுடன் இணைந்ததாக, சீனத் தூதுவரும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் பாலங்கள் நிர்மாணத் திட்டத்திற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.