முரசு சூறாவளி தீவிரமடைகிறது!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று (2) பிற்பகல் முதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறித்த சூறாவளி, நேற்று (1) இரவு 11.30 மணியளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இந்த சூறாவளி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் சூறாவளி, இன்று நள்ளிரவுக்கும் நாளை (3) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியான நெல்லூருக்கும் நர்சாபூருக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10°N முதல் 17°N வரையிலும், 80°E முதல் 90°E வரையிலும் உள்ள ஆழ்கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரை மீனவர்களும் கடற்படையினரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமற்ற மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கும் மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், தென்மேற்கு அல்லது தெற்கு திசையிலிருந்து மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

IMG_1052

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

November 2, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டேன்

IMG_1051

’எரிவாயுவை பதுக்க வேண்டாம்’!

November 2, 2026

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல்

IMG_1049

காலநிலை முன் அறிவிப்பு!

November 2, 2026

நாட்டின்; பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியகூறுகள்

IMG_1048

பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் கூட்டங்கள் ஆரம்பம்!

November 2, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் செயற்பாட்டுப்

IMG_1047

சீன அரசின் உதவியுடன் 9 பாலங்கள்

November 2, 2026

சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையின் 9 மாவட்டங்களில் சேதமடைந்த 9 பாலங்களைப் புதிதாக நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், கம்பஹா

IMG_1046

முரசு சூறாவளி தீவிரமடைகிறது!

November 2, 2026

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று (2) பிற்பகல்

IMG_1045

யாழில் பரபரப்பு! – நடந்தது என்ன?

November 2, 2026

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால்

acci main

அளவெட்டியில் விபத்து: இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

November 2, 2026

யாழ்ப்பாணம், அளவெட்டி – அழுக்கை சந்தி பகுதியில் நேற்றைய தினம் (1) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள்

arrest

கொக்கேய்னுடன் தச்சர் கைது!

November 2, 2026

சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘கொக்கேய்ன்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச

gun

சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி!

November 2, 2026

பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்

hu

மக்களுக்குப் பாரிய சுமை; 12 வரித் திருத்தங்கள் – மனித உரிமைகள் மையம் குற்றம்

November 2, 2026

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித்

fuel_1

எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

November 2, 2026

நேற்று(1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர