வேண்டிய வரங்கள் யாவும் தரும் கந்த சஷ்டி விரதம்!

ண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை மிகச்சிரத்தையோடு அனுஷ்டித்து வருகின்றனர்.

முருகன் பக்தர்கள் நெஞ்சார எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதிஅற்புதமான விரதம் மகா கந்தசஷ்டி விரதம். கந்தசஷ்டி நாளில் விரதமிருந்து கந்தக்கடவுளை மனமுருகி வழிபட்டால், தீராத வினைகளெல்லாம் தீர்ந்து, வேண்டிய வரங்கள் யாவும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இப்புனித விரதத்தை மிகச்சிரத்தையோடு அனுஷ்டித்து வருகின்றனர்.

“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” (சஷ்டியில் இருந்தால் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும்) என்ற ஆன்மீகப் பழமொழிக்கு ஏற்ப, கந்தசஷ்டி விரதமிருந்து எண்ணற்ற தம்பதியர் குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர். அதனால் தான், குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்கும் தம்பதியர் பலரும் இச்சஷ்டி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பொதுவாக முருகப்பெருமானுக்கு கிருத்திகை, மாதந்தோறும் வரும் சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், செவ்வாய் கிழமைகள் உகந்த நாட்களாகும். மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த நாள் (பிரதமை) தொடங்கி, ஆறாவது நாளை மகா கந்தசஷ்டி விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். அதன்படி, ஐப்பசி மாதத்தில் மட்டும் சஷ்டி முந்தைய ஆறு நாட்களும் பக்தர்கள் மிக கடுமையாக விரதம் இருந்து, முருகனை மனமுருக வேண்டிக்கொண்டு, சூரசம்ஹாரம் நிறைவடைந்து, மறுநாள் முருகன்- தேவயாணை திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு பக்தர்கள் தங்களின் விரதத்தை நிறைவு செய்வது வழக்கம்.

இந்த வகையில் இந்த ஆண்டுக்கான மகா கந்தசஷ்டி விரதம் வரும் நவம்பர் 10-ம்தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

முக்கிய தேதிகள் :

விரதம் தொடக்கம் (6 நாட்கள்): நவம்பர் 10-ம்தேதி (செவ்வாய்க்கிழமை)

சூரசம்ஹாரம்: நவம்பர் 15-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை)

திருக்கல்யாணம்: நவம்பர் 16-ம்தேதி (திங்கட்கிழமை)

பல்வேறு விரத நாட்கள் :

கந்த சஷ்டி விரதத்தை பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணிக்கையில் அனுஷ்டிப்பார்கள். அந்த வகையில்,

48 நாட்கள் (மண்டல விரதம்): செப்டம்பர் 29-ம்தேதி (செவ்வாய்) தொடங்குகிறது.

21 நாட்கள் விரதம்: அக்டோபர் 26-ம்தேதி (திங்கள்) தொடங்குகிறது.

11 நாட்கள் விரதம்: நவம்பர் 5-ம்தேதி (வியாழன்) தொடங்குகிறது.

6 நாட்கள் விரதம்: நவம்பர் 10-ம்தேதி (செவ்வாய்) தொடங்குகிறது.

1 நாள் விரதம் (சூரசம்ஹார நாள் மட்டும்): நவம்பர் 15-ம்தேதி (ஞாயிறு).

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்:

மகா சங்கல்பம்: ஆறு நாட்கள் தொடர்ந்து உபவாசமிருந்து, மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தி முருகனை வழிபடும் தீவிரமான விரத முறை இதுவாகும்.

சூரசம்ஹாரம்: தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகப்பெருமானின் வீர வரலாற்றைக் கொண்டாடும் நாளாகும்.

கந்த சஷ்டி 6 நாள் விரத முறை:

பொதுவாக கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் ஆறு நாட்களும் அதிகாலையில் நீராடி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, பகலில் உணவின்றி அல்லது பால்-பழம் மட்டும் உண்டு விரதமிருக்க வேண்டும். ஆறாம் நாள் சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஒரு டம்ளர் பால் அருந்தி விரதம் முடிக்கலாம், அல்லது ஏழாம் நாள் திருக்கல்யாணத்தன்று பாரணை செய்யலாம்.

விரதம் தொடங்கும் நாள் (நவம்பர் 10) : விரதம் அனுஷ்டிக்கும் 6 நாட்களும் அதிகாலையில் (6:00 மணிக்குள்) குளித்து, காப்பு கட்டி, கலசம் வைத்து முருகனுக்கு பிடித்த அரளி பூ சாற்றி, வைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

முழு விரதம்: 6 அல்லது 7 நாட்களும் உணவு எதுவும் உட்கொள்ளாமல், வெறும் நீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பது (உடல் வலிமை உள்ளவர்கள் மட்டும்).

பால் மற்றும் பழ விரதம்: காலை மற்றும் மாலையில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடுவது அல்லது நாள் முழுவதும் பால் அருந்தி விரதம் இருப்பது.

ஒரு வேளை உணவு: பகல் அல்லது மதிய வேளையில் மட்டும் எளிய சைவ உணவு (பச்சரிசி சாதம், தயிர் சாதம் அல்லது காய்கறிகள்) உட்கொள்வது.

திரவ மற்றும் சிறப்பு விரதங்கள்: இளநீர், துளசி நீர் அருந்துவது அல்லது முதல் நாள் 1 மிளகு என தொடங்கி 7 நாளில் 7 மிளகு மட்டும் உட்கொள்ளும் மிளகு விரதம்.

உடல் நலப்பிரச்சனை உள்ளவர்கள்: நீண்ட காலம் மருந்து சாப்பிடுபவர்கள் அல்லது உடல் நலம் சரியில்லாதவர்கள் முழு பட்டினி இருக்காமல், ஒரு வேளை உணவு அல்லது பால்-பழம் விரதம் இருப்பது நல்லது.

ஒரே முறை: கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்கள் 7 நாட்களும் ஒரே விதமான விரத முறையத் தொடர்ந்து பின்பற்றுவது சிறப்பு.

வழிபாடு: காலை மற்றும் மாலை வேளைகளில் கந்த சஷ்டி கவசம், சுப்பிரமணிய புஜங்கம், முருகனுக்கு உகந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்து தீபாராதனை காட்ட வேண்டும். தினமும் காலை, மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவேண்டும்.

பாரணை நேரம் (விரதம் முடித்தல்) :

சூரசம்ஹார நாள் : கந்த சஷ்டி ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு குளித்துவிட்டு, முருகனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு 1 டம்ளர் பால் அல்லது பழங்கள் அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். (6 நாட்கள் விரதம் இருப்பவர்கள்)

திருக்கல்யாண நாள் : 7 நாட்கள் முழுமையான விரதம் இருப்பவர்கள், கந்த சஷ்டி விரதத்தின் 7-ம் நாள் காலை முருகப்பெருமான் திருக்கல்யாண தரிசனம் முடித்த பிறகு பிரசாதம் அல்லது முறையான உணவருந்தி (அன்னதானம்) பாரணை செய்வர்.

IMG_1052

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

November 2, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டேன்

IMG_1051

’எரிவாயுவை பதுக்க வேண்டாம்’!

November 2, 2026

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல்

IMG_1049

காலநிலை முன் அறிவிப்பு!

November 2, 2026

நாட்டின்; பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியகூறுகள்

IMG_1048

பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் கூட்டங்கள் ஆரம்பம்!

November 2, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் செயற்பாட்டுப்

IMG_1047

சீன அரசின் உதவியுடன் 9 பாலங்கள்

November 2, 2026

சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையின் 9 மாவட்டங்களில் சேதமடைந்த 9 பாலங்களைப் புதிதாக நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், கம்பஹா

IMG_1046

முரசு சூறாவளி தீவிரமடைகிறது!

November 2, 2026

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று (2) பிற்பகல்

IMG_1045

யாழில் பரபரப்பு! – நடந்தது என்ன?

November 2, 2026

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால்

acci main

அளவெட்டியில் விபத்து: இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

November 2, 2026

யாழ்ப்பாணம், அளவெட்டி – அழுக்கை சந்தி பகுதியில் நேற்றைய தினம் (1) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள்

arrest

கொக்கேய்னுடன் தச்சர் கைது!

November 2, 2026

சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘கொக்கேய்ன்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச

gun

சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி!

November 2, 2026

பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்

hu

மக்களுக்குப் பாரிய சுமை; 12 வரித் திருத்தங்கள் – மனித உரிமைகள் மையம் குற்றம்

November 2, 2026

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித்

fuel_1

எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

November 2, 2026

நேற்று(1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர