நடைபெற்ற டொராண்டோ நகராட்சித் தேர்தலின் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, வார்டு 21-இல் Michael Thompson முன்னிலையில் இருக்கின்றார். 49 வாக்குச்சாவடிகளின் முடிவுகளும் பதிவான நிலையில் அவருக்கு 16,053 வாக்குகள் கிடைத்திருந்தன.
Michael Thompson கனடாவின் டொராண்டோ நகரசபையில் உள்ள வார்டு 21 Scarborough Centre பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீண்டகால நகரசபை உறுப்பினராக இருந்து வருகிறார்.
டிசம்பர் 2003 முதல் நகரசபை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் பழைய வார்டு 37-ஐயும், பின்னர் வார்டு 21 பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஜமைக்காவில் பிறந்து, ஸ்கார்பரோ பகுதியில் வளர்ந்தவர். Concordia பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
டொராண்டோவின் முன்னாள் துணை மேயராகப் பணியாற்றியுள்ளார். பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், இரவுநேரப் பொருளாதார நடவடிக்கைகளுக்கான டொராண்டோவின் முதல் தூதராகவும் செயல்பட்டுள்ளார்.