சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நாளை 14 ஆம் திகதி நடைபெறும் சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் வேகமாக அதிகரித்து வரும் மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக அனைத்து அரச, தனியார் மற்றும் ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முறையான பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வரும் பின்னணியில் அரச துறை, கல்வி உட்பட பல துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பது சுற்றாடல் ரீதியான சவாலாக அமைந்தபோதிலும், பொறுப்புணர்வுடன் அவற்றைச் சேகரித்தல், மீள் பயன்பாடு செய்தல் மற்றும் அறிவியல் ரீதியான மீள்சுழற்சி மூலம் நிலையான பசுமைப் பொருளாதார மதிப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் காணப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இலத்திரனியல் – கழிவுகளை திறம்பட முகாமைத்துவம் செய்வதற்கு உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை முழு ஆயுட்கால சுழற்சியையும் உள்ளடக்கும் வகையில் செயற்படுவது அத்தியாவசியமான காரணியாகும்.

இதற்காக கொள்கை மற்றும் சட்டப் பின்னணியை வலுப்படுத்தி, தேசிய சுற்றாடல் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள “விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு” (EPR) ஏற்பாடுகள் மற்றும் விரைவில் அனுமதி பெறப்படவுள்ள மின் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமை தொடர்பான தேசியக் கொள்கையை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் தங்களால் கைவிடப்பட்ட மின்-சாதனங்களை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் அகற்றுவதற்கு இடமளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு சேவை மையக் கட்டமைப்பு மற்றும் சிறப்புச் சேகரிப்பு மையங்கள் ஊடாக இத்திட்டம் தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

basil

பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு

October 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்

srisena

அரசமைப்பினை பின்பற்றியே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கினேன்- மைத்திரி

October 14, 2026

அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

nihal abeyasinga

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஜனவரியில்

October 14, 2026

அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2027 ஜனவரியில் ஆரம்பமாகலாம் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

anojan

அனோஜனின் மரணதண்டனை இரத்து

October 14, 2026

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.