சென்னை:
முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கொள்கைக் கூட்டணி:
சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விசிக ஒரு தூணாக இருக்கிறது. திருமாவளவன் எங்கள் தாய் சிறுத்தை. தவெக – விசிக கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி. முதல்-அமைச்சரின் நாகரிக அரசியலுக்குப் பிரதமர் மோடியுடனான சந்திப்பும், நட்பு அரசியலுக்கு ராகுல் காந்தியுடனான சந்திப்பும் எடுத்துக்காட்டாகும். மற்ற தலைவர்கள் இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
திமுக மீது விமர்சனம்:
மேலும், “மெட்ரோ திட்டப் பணிகளைத் தாங்கள் கொண்டுவந்ததாகக் கூறும் திமுக, அதற்கான நிதியை அண்ணா அறிவாலயத்திலிருந்தா கொண்டுவந்தது? நல்ல திட்டங்களைத் தாங்கள் கொண்டுவந்ததாகக் கூறும் அவர்கள், நடைபெறும் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் சீரழிவுகளுக்குப் பொறுப்பேற்பார்களா? தற்போதைய அரசில் ஊழல் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது,” என அவர் விமர்சித்தார்.
#Rajmohan #CMVijay #TVK #VCK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive