மதுரை:
தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தினேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
விலை கிடுகிடு உயர்வு:
தமிழகத்தில் சன்ன ரக நெல்லுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட சன்ன ரக அரிசியின் விலை ரூ.75 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசியின் வரத்து 100 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
மக்கள் பீதியடைய வேண்டாம்:
காலநிலை மாற்றங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சன்ன ரக அரிசிக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. மற்ற வகை அரிசிகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து தேவைக்கு அதிகமாக அரிசி வாங்கி இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை என தினேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
#SannaRagaRice #RicePriceHike #Madurai #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive