யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய போக்குவரத்து நிலைமையை ஆய்வு செய்து, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தியை திட்டமிடுவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து ஆய்வை தற்போதைய நிலைமை, மக்கள் தொகை, நகர வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப மீளாய்வு செய்து புதுப்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட முக்கிய அம்சங்கள்:
யாழ்ப்பாண நகரம் மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, மக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் குறைந்த நேரத்தில் பயணிக்கக்கூடிய நவீன, பாதுகாப்பான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவது இத்திட்டமிடலின் முக்கிய நோக்கமாகும்.
மக்களின் அன்றாட தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால யாழ்ப்பாணத்தை திட்டமிடுவோம்.