உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம்

மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் “உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் தேசிய கட்டமைப்பு” தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றமொன்றினால் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துப் பணிகளையும் இனங்கண்டு, அவற்றில் டிஜிட்டல் கட்டமைப்புக்குள் உள்ளடக்கக்கூடிய மற்றும் உள்ளடக்க முடியாத சேவைகள் எவை என வேறுபடுத்திக் கொள்ளுமாறும், தற்போதுள்ள கட்டமைப்புகளினால் அந்த அனைத்து சேவைகளும் உள்ளடக்கப்படுகின்றதா என்பதை கண்டறியுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

பல்வேறு நிறுவனங்களால் தனித்தனியாகச் செயற்படுத்தப்படும் வெவ்வேறான கட்டமைப்புகளுக்குப் பதிலாக, முழுமையான அரச சேவையையும் உள்ளடக்கும் வகையில் ஒரு தேசியக் கட்டமைப்பை ஸ்தாபிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அந்தப் பணிகளின் போது பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள கட்டமைப்புகளில் காணப்படும் குறைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொண்டு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் பணிகளை செயற்திறனுடன் ஒருங்கிணைப்பதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூன்று அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி இங்கு பணிப்புரை விடுத்தார்.

உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற வரி செலுத்துதல்கள், பொது வருமானங்கள் (விளம்பரப் பலகைக் கட்டணங்கள், விளையாட்டரங்குகள் மற்றும் பொது மண்டபங்களை முன்பதிவு செய்தல்), விற்பனை நிலைய வாடகைகள், நீர் கட்டணங்கள் மற்றும் பல்வேறு அனுமதிப் பத்திரங்கள்/உரிமங்களைப் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வழிமுறைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக GovPay போன்ற கட்டமைப்புகளை இதன் மூலம் மேலும் மேம்படுத்திக் கொள்ளக்கூடிய முறைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டமயமாக்கல் செயற்பாடு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் 300க்கும் மேற்பட்ட சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், கிராம உத்தியோகத்தர் பிரிவு முதல் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டம் வரை சேவைகளை வலையமைக்கும் செயற்பாட்டின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

ceb

வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மின்தடை!

October 1, 2026

வவுனியா–மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக, வடக்கின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாகத்

thyity

தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 07ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 1, 2026

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுத்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி

velan1

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக குரல்கொடுத்த எங்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு வழக்கு – வேலன் சுவாமிகள்

October 1, 2026

சிறீலங்கா அரசினால் தனியார் காணிகளை அபகரித்து, சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றப்பட வேண்டும், காணி உரிமையாளர்களிடம்—மக்களின் காணி

nirosh

சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எங்களுக்கு எதிராக பொலிஸார் சோடிக்கப்பட்ட வழக்கு-தியாகாரசா நிரோஸ்

October 1, 2026

சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எங்களுக்கு எதிராக பொலிஸார் சோடிக்கப்பட்ட வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர் என வலிகிழக்கு பிரதேச

batti land

மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை விவகாரத்தில் சட்டத்தை மீறிய குடியேற்றங்களுக்கு வழிவகுக்கும் தீர்வை ஏற்க முடியாது! நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, மேச்சல் தரையை பண்ணையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்.

October 1, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தொடரும் மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை விவகாரம் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று 30.09.2026 நடைபெற்ற

jai tilvin

இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான ஒரு பங்காளி- ரில்வினை சந்தித்த பின்னர் ஜெய்சங்கர்

October 1, 2026

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

pala

187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

October 1, 2026

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான

li

42 செகண்டில் 95 மாடி!

October 1, 2026

பெரிய அப்பார்ட்மெண்ட், மால்ஸ்ல லிஃப்ட்ல நுழைஞ்சதும் கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுப்போம்; ஆனா அது பியூர் டிசைன் இல்ல, சயின்ஸ்

ele

உலக எலெக்ட்ரானிக்ஸ் சந்தையைக் கைப்பற்றும் நாடுகள்

October 1, 2026

காலையில் நாம் எழுந்தவுடன் பார்க்கும் மொபைல் போன், கணினி, தொலைக்காட்சி, ஸ்மார்ட்வாட்ச் முதல் காருக்குள் இருக்கும் எலெக்டிரானிக்ஸ் சாதனங்கள் வரை,

c

இயற்கையாக சாயம் பூசும் அதிசய நதி!

October 1, 2026

செயற்கை இரசாயனங்கள் இல்லாத, இயற்கையான முறையில் துணிகளுக்கு நிரந்தரமாக சாயம் பூசும் ஒரு வியக்கத்தக்க நதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள

830181142_1407220974850182_2735770595639895619_n

முல்லையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை; 34 இறங்கு துறைகளையும், நாயாறு களப்பையும் எல்லைப்படுத்த முடிவு

October 1, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் முல்லைத்தீவிலுள்ள 34கடற்றொழில் இறங்குதுறைகளையும், நாயாறு கடல் நீரேரியினையும்

vijitha

இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் விஜித ஹேரத்!

October 1, 2026

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடருக்கு (UNGA81) இணையாக, இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை