தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றல்: மேயர் பாட்ரிக் பிரவுன் கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை இலங்கை பொலிஸார் அகற்றிய சம்பவத்திற்கு கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பாட்ரிக் பிரவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த மறுநாளே, அங்கு அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையை இலங்கை பொலிஸார் அதிகாலை வேளையில் அகற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராம்ப்டன் மேயர் பாட்ரிக் பிரவுன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “நல்லூர் நினைவிடத்தில் தமிழ் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய மறுநாளே, அங்கு அமைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலையை இலங்கை பொலிஸார் அகற்றியுள்ளனர். இது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. 1958ஆம் ஆண்டு கலவரங்கள், 1983 கருப்பு ஜூலை படுகொலைகள் மற்றும் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான இனப்படுகொலையை மேற்கொண்டு வந்துள்ளது.

இந்த இனப்படுகொலை இன்று வேறு வடிவங்களில் தொடர்கிறது. தமிழ் மக்களின் வரலாறு, நினைவுகள் மற்றும் அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நினைவிடங்கள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்படுகின்றன; நினைவேந்தல்கள் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன; அதிகாலை வேளையில் சிலைகள் அகற்றப்படுகின்றன.

ஆனால், வரலாற்றை உங்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. தமிழ் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை உலகம் கண்டுள்ளது; உண்மையை உலகம் அறிந்துள்ளது. கடந்த கால அமைதியை சீர்குலைக்கவோ அல்லது வரலாற்றை அழிக்கவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் நிலைத்து நிற்கும் உண்மையை மாற்றிவிட முடியாது.

உண்மை ஒருபோதும் புதைக்கப்படக்கூடாது என்பதற்காகவே பிராம்ப்டன் நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தை நாங்கள் பெருமையுடன் நிறுவியுள்ளோம். வரலாற்றை உங்களால் அழிக்க முடியாது. இலங்கை அரசின் தொடர்ச்சியான தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்; எப்போதும் நினைவில் கொள்வோம். கொழும்பில் ஆடம்பரமாக வாழ்ந்து வரும் போர்க் குற்றவாளிகளுக்கு நான் கூறுவது ஒன்றுதான்—நீங்கள் செய்த படுகொலைகள், அத்துமீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளில் இருந்து தப்பிவிடலாம் என்று நினைக்க வேண்டாம். உலகம் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.”

kalkionline_2026-09-28_seh3ts15_விஜய்-திரிஷா-போஸ்டர் - Copy (2)

“தாய்மாமன் விஜய்க்கு நன்றி!” – மதுரையில் த்ரிஷா நற்பணி மன்றம் ஒட்டிய போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

September 29, 2026

மதுரை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய்

3

“யூடியூப் ரீல்ஸைப் பார்த்துத் திட்டம்!” – பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் தங்க நகை கொள்ளையடித்த வாலிபர் அதிரடி கைது!

September 29, 2026

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பிரபலமான பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்,

gota26

கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியம் குறித்து ஊடகவியலாளர் ஒருவரின் நேரடி அனுபவம்

September 29, 2026

Tharindu Uduwaragedara காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர் நுவன் போபகே இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்

got

கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியம் குறித்து ஊடகவியலாளர் ஒருவரின் நேரடி அனுபவம்

September 29, 2026

Tharindu Uduwaragedara காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர் நுவன் போபகே இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்

Gotabaya-Rajapaksa

லலித் – குகன் வழக்கு: மேலும் சாட்சியங்களை பதிவு செய்ய நவம்பர் 27 வரை ஒத்திவைப்பு

September 29, 2026

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயல்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்

lalith gugan22

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷ ஏன் இவ்வளவு பயந்தார்?

September 29, 2026

Shalika Wimalasena 2011 டிசம்பர் 09 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களான

828392539_28086446187693270_7108244713637006008_n

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது ?கோட்டா பதில் சொல்லவேண்டும் -கோட்டாபய நீதிமன்றத்தில் ஆஜரானவேளை ஆர்ப்பாட்டம்

September 29, 2026

முன்னணி சோசலிசக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட, லலித் மற்றும் குகன் ஆகிய இரு சகோதரர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான

PAr

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றல்: மேயர் பாட்ரிக் பிரவுன் கடும் கண்டனம்!

September 29, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை இலங்கை பொலிஸார் அகற்றிய சம்பவத்திற்கு கனடாவின் பிராம்ப்டன் நகர

Nalinda Jayatissa Cabinet Meet-790605

நீதிமன்றத்திற்கு தெரிவி;த்த பின்னரே திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் அகற்றினர்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

September 29, 2026

யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் தீலிபனின் சிலை அது தொடர்பான விடயங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்த பின்னரே அகற்றப்பட்டது என அமைச்சரவை பேச்சாளர்

shiranthi brother

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – சிராந்தியின் சகோதரரும் கைது

September 29, 2026

கொழும்பு பொரளைப் பகுதியில் அமைந்துள்ள ரூ. 1.58 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய அரச காணிக் தொடர்பில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள்

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை

September 29, 2026

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயல்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்

828539158_28512119721775499_3546511580812882201_n

யாழ் நகரை வண்ணமயமாக்கிய வடக்கு மாகாணத்தின் பண்பாட்டுப் பெருவிழா

September 29, 2026

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா, நமது மண்ணின் கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் தொன்மையான வாழ்வியலை