யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் தீலிபனின் சிலை அது தொடர்பான விடயங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்த பின்னரே அகற்றப்பட்டது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
பொலிஸார் இது தொடர்பான விடயங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்இஇது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
கடந்தகாலங்களில் செப்டம்பர் மாதத்தில் திலீபனின் நினைவேந்தல் இடம்பெற்றவேளை அவரது படத்தினை பயன்படுத்தியிருந்தனர் ஆனால் சிலையை பயன்படுத்தவில்லை.சிலையொன்று பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்தடவை.
இந்த வருடம் சிலையொன்றை நிறுவியிருந்தனர்இஅதனை பொலிஸார் அகற்றினர்.தமிழீழ விடுதலைப்புலிகள் என்பது தடை செய்யப்பட்ட அமைப்புஇதடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிப்பதை எங்கள் நாட்டின் சட்டம் அனுமதிப்பதில்லை.அவர்களின் கொடிகள் போன்றவற்றை பயன்படுத்த முடியாது.
அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிலையை அகற்றுவதற்கு முன்னர் பொலிஸார் நீதிமன்றத்திற்கு விபரங்களை தெரியப்படுத்தியிருந்தனர்.
நாட்டில் இனரீதியிலான முறுகலை ஏற்படுத்துவதற்கு அவ்வப்போது முயற்சிகள் இடம்பெறுகின்றனஇஅரசாங்கம் அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.