இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – சிராந்தியின் சகோதரரும் கைது

கொழும்பு பொரளைப் பகுதியில் அமைந்துள்ள ரூ. 1.58 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய அரச காணிக் தொடர்பில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, காணி உரிமை நிர்ணயத் திணைக்களத்தின் முன்னாள் விசாரணை ஆணையாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நிஷாந்த மோகன் விக்கிரமசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று (29) காலை 9.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டின் விபரம்: சந்தேகநபர் விசாரணை ஆணையாளராகப் […]
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயல்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தலைமை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு நேரில் பயணிப்பதில் தனக்குச் சிரமம் இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் மேஜிஸ்திரேட் நீதிமன்றம், இணையவழி காணொளி (Online Video) வாயிலாக சாட்சியமளிக்க அவருக்கு அனுமதி […]
யாழ் நகரை வண்ணமயமாக்கிய வடக்கு மாகாணத்தின் பண்பாட்டுப் பெருவிழா

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா, நமது மண்ணின் கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் தொன்மையான வாழ்வியலை ஒரே பவனியில் கண்முன்னே கொண்டு வந்த ஓர் அற்புதமான நிகழ்வாக அமைந்தது. காலையில் சிறப்பாக ஆரம்பமான இந்த விழா, பின்னர் யாழ் நகரின் வீதிகளை வலம் வந்த பிரம்மாண்டமான பண்பாட்டுப் பேரணியாக மாறியது. காலத்தால் மறைந்து வரும் பல பாரம்பரியங்கள்… நமது முன்னோர்களின் வாழ்வியல் முறைகள்… பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள்… கலை வடிவங்கள்… உடை, இசை, […]
சிலையை அகற்றியது சிறீலங்கா பொலிசார்.. அமைச்சர் பட்டப் பகலில் பச்சை பொய் கூறுகிறார். வேலன் சுவாமிகள் காட்டம்.

யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்திலிருந்து திலீபனின் திரு உருவச்சிலையை அகற்றியது மாநகர சபை அல்ல சிறீலங்கா பொலிசார் எனத் தெரிந்தும் அமைச்சர் சந்திரசேகரன் பட்டப்பகலில் பச்சப் பொய் கூறுகிறார் என தவத்திரு வேலன் சுவாமிகள் காட்டமாக தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் உருவாச்சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். […]
திலீபனின் சிலை அகற்றப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவேண்டும் – தென்பகுதி சட்டத்தரணி வேண்டுகோள்

தியாகதீபம் தீலிபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்பகுதியை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி தனுக ரனஜன்ஹ இது தொடர்பில் முறைப்படொன்றை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார். அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது யாழ்ப்பாணத்தில் திலீபனின் சிலையை பொலிஸார் அகற்றியமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டை கோரி இந்த முறைப்பாட்டை சமர்ப்பிக்கின்றேன். பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின் படி இந்த சிலை பொலிஸாரினால் […]
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூல வரைவு வர்த்தமானியில்

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூல வரைவு வர்த்தமானியில் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது. நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய கொள்கைகளின் மூலம் கிரிக்கெட் விளையாட்டைக் கட்டுப்படுத்துதல், நிர்வகித்தல், ஒழுங்குபடுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டமூல வரை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
ஐ.நாவின் மறுசீரமைப்புகளுக்கு இலங்கை ஒத்துழைக்கும்!

ஐக்கிய நாடுகள், இலங்கைக்கு தவிர்க்கமுடியாத ஒரு பங்காளராகும் என இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81 ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த வௌிவிவகார அமைச்சர், உலகில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையை மேலும் உள்ளடக்கியதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு, அதற்குள் அர்த்தமுள்ள மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதை இலங்கை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார். தற்கால உலக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் […]
தெல்லிப்பழையில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிப்பர் மற்றும் மோட்டார் சைக்களில் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மூன்று டிப்பர் வண்டிகள் மணல் ஏற்றியவாறு மயிலங்காடு – புன்னாலைக்கட்டுவன் வீதியால் சென்ற போது தெல்லிப்பழை சந்தியில் வைத்து பொலிஸார் அவற்றை வழிமறிக்க முற்பட்டனர். இருப்பினும் அந்த 3 டிப்பர் வண்டிகளும் முன்னால் வந்த மோட்டார் சைக்கிள்கள் வழியை சீர் செய்து கொடுக்க மணலை வீதியில் கொட்டிவிட்டு தப்பிச் சென்றன. இருப்பினும் பொலிஸார் வீதி போக்குவரத்து […]
அர்ச்சுனா, ஹரிஸ் உள்ளிட்ட அறுவருக்கு நீதிமன்றம் அழைப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக அவதூறு பரப்பிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வைத்தியர் தொடர்பான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிருவதற்கும் பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு […]