சிலையை அகற்றியது சிறீலங்கா பொலிசார்.. அமைச்சர் பட்டப் பகலில் பச்சை பொய் கூறுகிறார். வேலன் சுவாமிகள் காட்டம்.

யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்திலிருந்து திலீபனின் திரு உருவச்சிலையை அகற்றியது மாநகர சபை அல்ல சிறீலங்கா பொலிசார் எனத் தெரிந்தும் அமைச்சர் சந்திரசேகரன் பட்டப்பகலில் பச்சப் பொய் கூறுகிறார் என தவத்திரு வேலன் சுவாமிகள் காட்டமாக தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் உருவாச்சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தியாக தீபத்தின் திரு உருவ சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ் மாநகர சபைக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தான் காரணம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவர் பட்டப் பகலில் பச்சைப் பொய்யை கூறி சிறீலங்கா அரசின் தமிழின விரோத போக்கை மறைப்பதற்காக திட்டமிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார்.
தியாக தீபத்தின் உருவச்சிலையை அகற்றியது அனுர தலைமையிலான அரசாங்கத்தின் பொலிசார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இவ்வாறான ஒரு நிலையில் சிலை விவகாரத்தை திசை திருப்புவதற்காக தமிழ் கட்சிகள் இடையே பிளவை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் சந்திரசேகரன் திட்டமிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார்.
அகிம்சையை போதித்த திலீபனின் சிலையை அகற்றத் துணிந்த அனுர அரசாங்கம் அவ்வாறு தமிழ் மக்களுக்கான சம உரிமையை வழங்கும் என்பது கேள்வி.
தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் நினைவுச் சின்னங்களும் உருவச் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களுக்காக தனது இன்னுயிரை நீத்த அகிம்சாவாதிக்கு உருவச்சிலை அமைப்பது தவறா.
மாநகர சபையினுடைய அதிகாரத்தை சிறீலங்கா பொலிசார் கையில் எடுத்தமை சட்டவிரோதமான செயல் அதில் சம்பந்தப்பட்ட பொலிசார் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆகவே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தில் செயல்படும் அனுர தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மதித்து தியாக தீபத்தின் மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Gotabaya-Rajapaksa

லலித் – குகன் வழக்கு: மேலும் சாட்சியங்களை பதிவு செய்ய நவம்பர் 27 வரை ஒத்திவைப்பு

September 29, 2026

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயல்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்

lalith gugan22

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷ ஏன் இவ்வளவு பயந்தார்?

September 29, 2026

Shalika Wimalasena 2011 டிசம்பர் 09 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களான

828392539_28086446187693270_7108244713637006008_n

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது ?கோட்டா பதில் சொல்லவேண்டும் -கோட்டாபய நீதிமன்றத்தில் ஆஜரானவேளை ஆர்ப்பாட்டம்

September 29, 2026

முன்னணி சோசலிசக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட, லலித் மற்றும் குகன் ஆகிய இரு சகோதரர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான

PAr

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றல்: மேயர் பாட்ரிக் பிரவுன் கடும் கண்டனம்!

September 29, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை இலங்கை பொலிஸார் அகற்றிய சம்பவத்திற்கு கனடாவின் பிராம்ப்டன் நகர

Nalinda Jayatissa Cabinet Meet-790605

நீதிமன்றத்திற்கு தெரிவி;த்த பின்னரே திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் அகற்றினர்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

September 29, 2026

யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் தீலிபனின் சிலை அது தொடர்பான விடயங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்த பின்னரே அகற்றப்பட்டது என அமைச்சரவை பேச்சாளர்

shiranthi brother

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – சிராந்தியின் சகோதரரும் கைது

September 29, 2026

கொழும்பு பொரளைப் பகுதியில் அமைந்துள்ள ரூ. 1.58 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய அரச காணிக் தொடர்பில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள்

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை

September 29, 2026

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயல்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்

828539158_28512119721775499_3546511580812882201_n

யாழ் நகரை வண்ணமயமாக்கிய வடக்கு மாகாணத்தின் பண்பாட்டுப் பெருவிழா

September 29, 2026

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா, நமது மண்ணின் கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் தொன்மையான வாழ்வியலை

velan1

சிலையை அகற்றியது சிறீலங்கா பொலிசார்.. அமைச்சர் பட்டப் பகலில் பச்சை பொய் கூறுகிறார். வேலன் சுவாமிகள் காட்டம்.

September 29, 2026

யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்திலிருந்து திலீபனின் திரு உருவச்சிலையை அகற்றியது மாநகர சபை அல்ல சிறீலங்கா பொலிசார்

826047743_2538007303334500_2249341759957978704_n

திலீபனின் சிலை அகற்றப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவேண்டும் – தென்பகுதி சட்டத்தரணி வேண்டுகோள்

September 29, 2026

தியாகதீபம் தீலிபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்பகுதியை சேர்ந்த

gaze

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூல வரைவு வர்த்தமானியில்

September 29, 2026

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூல வரைவு வர்த்தமானியில் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது. நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய கொள்கைகளின் மூலம்

vi

ஐ.நாவின் மறுசீரமைப்புகளுக்கு இலங்கை ஒத்துழைக்கும்!

September 29, 2026

ஐக்கிய நாடுகள், இலங்கைக்கு தவிர்க்கமுடியாத ஒரு பங்காளராகும் என இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்