தியாகதீபம் தீலிபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்பகுதியை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி தனுக ரனஜன்ஹ இது தொடர்பில் முறைப்படொன்றை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது
யாழ்ப்பாணத்தில் திலீபனின் சிலையை பொலிஸார் அகற்றியமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டை கோரி இந்த முறைப்பாட்டை சமர்ப்பிக்கின்றேன்.
பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின் படி இந்த சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது.இச்சம்பவமா
அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சட்டத்திற்கு அமைவாகவும் இலங்கையின் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளை கருத்தில்கொண்டும் முன்னெடுக்கப்பட்டதா என்பதை ஆராயுமாறு நான் மனித உரிமை ஆணைக்குழுவை கேட்டுக்கொள்கின்றேன்.
சிலையை அகற்றும் நடவடிக்கை சட்டபூர்வமான அதிகாரத்தின் கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டதா?
அனைத்து சமூகங்களினதும் நினைவேற்தல் நடவடிக்கைகளுக்கும் இதுபோன்ற தரநிலைகள் சமமாக பயன்படுத்தப்படுகின்றதா?
அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் நபர் ஒருவரின் தனிமனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளதா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆராயவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(ரி)